சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு அவசியம் தேவை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "ஒரு காலத்தில் கிராமங்களுக்கு செய்திதாள்கள்கூட வருவது கடினமாக இருந்தது. ரேடியோ மூலமாக மட்டுமே செய்திகளை அறிய முடிந்தது. யார், யார் சட்டப்பேரவையில் நன்றாக பேசினார்களோ அவர்களை தங்கள் அரசியல் தலைவர்களாக மக்கள் ஏற்று கொள்வார்கள். அவர்களை தேர்தல்களில் வெற்றி பெற செய்தனர்.

அதன் பின்னர் தொலைக்காட்சி வந்தது. தற்போது நூற்றுக்கணக்கான சேனல்கள் வந்து விட்டன. இது மாபெரும் மாற்றம்.
சமூக வலைத்தளங்கள் மூலம் எவ்வளவு நன்மைகள் உள்ளனவோ, அவ்வளவு கெடுதல்களும் நடைபெற்று வருகின்றன. தனிப்பட்ட நபர்கள், பெண்கள் ஆகியோரை குறி வைத்தும் சமூக வலைத்தளங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் சமூக வலைத்தளங்களுக்குக் கட்டுப்பாடு அவசியம் தேவை.

பிரதமர் நரேந்திர மோடி தொலைநோக்கு பார்வையுடன் முன்னோக்கி செல்கிறார். 'விக்சித் பாரத்' எனும் பெயரால் 2047இல் இந்தியா உலகிலேயே முதல் இடத்தை வகிக்கும் எனும் நம்பிக்கை எனக்குள்ளது.
நான் சிறையில் இருந்தபோது ஹைதராபாத் ஐ.டி. ஊழியர்கள் எனக்காக போராட்டம் நடத்தியை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். நான் மீண்டும் பிறந்தால் ஒரு தெலங்கராகவே பிறக்க விரும்புகிறேன்" என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய் புகழ் பாடிய வைஷ்ணவி தவெகவிலிருந்து விலகல்.. கட்சியில் ஈகோ மோதல்.? வெளங்கிடும் விஜய் கட்சி!
இதையும் படிங்க: கூட்டணியை பற்றி நீங்க பேசக்கூடாது..! அதிமுக மாஜி அமைச்சரை கிழித்த டிடிவி..!