ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி ராஜமுந்திரியில் உள்ள லாலா செருவு சவுடேஷ்வரிநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலர் பிப்ரவரி 15 முதல் வாந்தி, சிறுநீர் கழிக்க இயலாமை, வயிறு உப்புசம் மற்றும் பிற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற காரணங்களால் 14 பேர் நகரத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் கலப்பட பால் குடித்து அனுரியா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி
கிருஷ்ணவேணி (75) ராதாகிருஷ்ணா (70) சேஷகிரி ராவ் (72) மற்றும் ரமணி ஆகியோர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகரில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் 8 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் உள்ள 274 பேரின் இரத்த மாதிரிகள் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பினர். குறிப்பாக இதற்கு காரணமான நரசாபுரம் சேர்ந்த பால் வியாபாரி நாகேஸ்வர ராவ் 42 பேரிடம் பால் சேகரித்து 164 குடும்பத்திற்கு பால் விநியோகம் செய்து வந்ததால் அந்த பகுதியில் உள்ள பால் வியாபாரிகளிடம் இருந்து மாதிரிகள் சேகரித்து ஐதராபாத் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நல்லக்கண்ணு இறந்துவிட்டாரா? நம்பாதீங்க... CPI கொடுத்த விளக்கம்..!!
இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ள ஆந்திர அரசு, கலப்பட பாலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்துள்ளது.
இதையும் படிங்க: ஜெயலலிதா இறந்த அன்று நடந்தது இதுதான்... அப்பல்லோவில் நடந்ததை புட்டு, புட்டு வைத்த சசிகலா