ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5 ஆம் சென்னையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அரசியல் வட்டாரத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலைக்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. சென்னையின் நிழல் உலகத்தில் மூன்று குழுக்களுக்கு இடையேயான ஆதிக்கப் போட்டியும் ஒரு காரணமாக இருக்கலாம் என காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மாநில காவல்துறை சுதந்திரமாக விசாரிக்க முடியாது. அரசியல் அழுத்தங்கள் உள்ளன என்று அவர் வாதிட்டார். நீதிபதி பி. வேல்முருகன் தலைமையிலான அமர்வு, ஜூலை மாதத்தில் விசாரணையின் போது போலீஸை கடுமையாக விமர்சித்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று வாதிட்டார்.

2025 செப்டம்பர் 24ஆம் தேதி, உயர்நீதிமன்றம் வரலாற்று முடிவை வழங்கியது. 21 பக்க உத்தரவில், போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, வழக்கு முழுவதும் சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவரது மனைவி பொற்கொடி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். சிபிஐ விசாரணையை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி பொற்கொடி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… சிபிஐ விசாரிக்க தடை இல்லை… சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு…!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய நிலையில் அதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சிபிஐ நடத்தும் புலன் விசாரணையை உச்சநீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அரசியல் அழுத்தம் நிறைந்த வழக்கு என்பதால் சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் என பொற்கொடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரவுடி நாகேந்திரன் உடலை பிரேத பரிசோதனை செய்யுங்கள்... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...!