மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டத்தில் உள்ள கல்லணை, புதூர், அச்சங்குளம், தூம்பகுளம், நெடுங்குளம், உலகாணி ஊராட்சிகளில் சட்டவிரோத குவாரிகள் பெருகி வருகின்றன. அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள், பஞ்சமி நிலங்கள், விவசாய நிலங்கள் ஆகியவற்றை ஆக்கிரமித்து குவாரிகள் இயங்கி வருகின்றன.
இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, கிராம மக்களும் பல வழிகளில் பாதிக்கப்படுகின்றனர். தண்ணீர் பற்றாக்குறை, சாலை சேதம், தூசி, இரைச்சல், உடல்நலக் கோளாறுகள் போன்ற பிரச்னைகள் அதிகரித்துள்ளன.
இதை எதிர்த்து அந்த கிராமங்களைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் மாஸ்க் அணிந்து மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மனு அளித்தனர். ராணுவ வீரர்கள் கோபத்துடன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மொத்தமும் போச்சு!! திமுக தலையில் இறங்கிய பேரிடி! வட மாவட்டங்களில் கடும் அதிருப்தி! உளவுத்துறை சர்வே!
அண்ணாமலை தனது அறிக்கையில் கூறியதாவது: நாட்டின் எல்லைகளை காக்கும் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள், விடுப்பு எடுத்து வந்து தங்கள் சொந்த கிராமங்களை கனிம வள கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்ற போராட வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது ஊழல் மலிந்த திமுக ஆட்சியின் மீது சுமத்தப்பட்டுள்ள மிக மோசமான குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக உள்ளது.
When Army jawans, entrusted with guarding the nation’s borders, are compelled to take leave merely to protect their own villages from mass plunder, it is a damning indictment of governance under the corrupt DMK govt.
Even more disturbing are the jawans’ claims that lands… pic.twitter.com/bf7B9iQePl
— K.Annamalai (@annamalai_k) February 2, 2026
அவர்களது கிராமங்களில் உள்ள அய்யனார் மற்றும் பெருமாள் கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள், பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் திட்டமிட்டு கபளீகரம் செய்யப்பட்டு சட்டவிரோத குவாரிகள் இயங்கி வருவது மிகுந்த கவலையளிக்கிறது. ஆனால் திமுக அரசு இதையெல்லாம் மவுனமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம், மாநிலம் முழுவதும் நடக்கும் குவாரி கொள்ளையில் திமுகவும் முழு அளவில் பங்கெடுத்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோத மணல் குவாரிகள் பெருகி வருவதை கண்டறிந்து அமலாக்கத் துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. பாஜக சார்பில் பலமுறை இதை எடுத்துரைத்தோம். ஆனால் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேண்டுமென்றே வேடிக்கை பார்க்கிறது. இதன்மூலம் சட்டவிரோத குவாரி செயல்பாடுகளுக்கு அரசு உடந்தையாக இருப்பது உறுதியாகிறது.
சட்டம், நீதி, பொது மக்களின் உரிமைகளை திமுக அரசு முற்றிலும் புறக்கணித்து விட்டது என்பதை இந்த சம்பவம் அம்பலப்படுத்தியுள்ளது. ராணுவ வீரர்களின் இந்த போராட்டம் திமுக ஆட்சியின் முகமூடியை கிழித்து எறிந்துள்ளது என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரர்களின் கோபம் மக்களின் கோபத்தை பிரதிபலிப்பதாக பார்க்கப்படுகிறது. சட்டவிரோத குவாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், வட மாவட்டங்களில் திமுகவுக்கு ஏற்கனவே இருக்கும் அதிருப்தி மேலும் அதிகரிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!