பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத கூடாரங்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. 'ஆபரேஷன் சிந்தூர்'-இன் கீழ் நடந்த இந்த தாக்குதலில் இதுவரை 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

பாகிஸ்தான் பயங்கரவாத கூடாரங்களின் மீதான இந்திய படைகளின் தாக்குதல்ளுக்கு பிறகு, X உட்பட சமூக ஊடக தளங்களில் பலர் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தாக்குதல் இப்படித்தான் நடந்தது! என்.ஐ.ஏ விசாரணையில் வெளிவந்த உண்மை.. ரீல்ஸ் எடுத்தவரின் வாக்குமூலம்!!


அந்த வகையில் மக்களவை எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவருமான அசாதுதீன் ஓவைசி, இந்திய ராணுவம் நடத்திய "ஆபரேஷன் சிந்தூர்" குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது நமது பாதுகாப்புப் படைகள் நடத்திய இலக்குத் தாக்குதல்களை நான் வரவேற்கிறேன். பாகிஸ்தான் ஆழ்கடல் அரசுக்கு ஒரு பாடம் கற்பிக்கப்பட வேண்டும், அப்போதுதான் அது மீண்டும் ஒரு அடி கூட எடுக்காது. பாகிஸ்தானின் பயங்கரவாத உள்கட்டமைப்பு அழிக்கப்பட வேண்டும். ஜெய் ஹிந்த்!
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தேசப்பணிக்கு தயார்..! எதுவும் எங்களை தடுக்காது.. ராணுவம், கடற்படை அறிவிப்பால் பதற்றம்!!