ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரத்பால் தர்காவில் இந்தியாவின் தேசிய சின்னமான அசோக சின்னம் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜம்மு காஷ்மீர் வக்ஃப் வாரியத்தால் சீரமைக்கப்பட்டு புதன்கிழமை திறக்கப்பட்ட இந்த தர்காவின் கல்வெட்டில் அசோக சக்கரம் பொறிக்கப்பட்டிருந்தது.

இதனைக் கண்டு ஆத்திரமடைந்த சில இஸ்லாமியர்கள், அசோக சின்னத்தை உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, பாஜகவினர் இதனை "தீவிரவாத செயல்" எனக் கண்டித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக பாஜக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: அன்றாடம் திண்டாடும் நிலை தான்… பால் கூட்டுறவு சங்க EX. ஊழியர்களுக்காக குரல் கொடுத்த அண்ணாமலை!
இந்த சம்பவம் குறித்து ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் கவிந்தர் குப்தா, தேசிய சின்னத்திற்கு அவமதிப்பு ஏற்படுத்திய இந்த செயலை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
https://x.com/i/status/1963958562142495042
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, ஒரு ஆன்மீக தளத்தில் எதற்கு நாட்டின் சின்னம் என கேள்வி எழுப்பியுள்ள அவர், இதுவரை எந்த ஆன்மீக தளத்திலும் இது போன்ற இந்திய சின்னங்கள் தென்பட்டதில்லை என அவர் தெரிவித்துள்ளார். மத உணர்வுகளை புண்படுத்தக் கூடாது எனவும், இதற்காக பொது பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தியது ஏன் எனவும் அவர் விமர்சித்தார்.

போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தேசிய உணர்வுகளை புண்படுத்தியதாகவும், இறையாண்மையின் சின்னத்திற்கு அவமதிப்பு ஏற்படுத்தியதாகவும் கருதப்படுகிறது. இது ஜம்மு காஷ்மீரில் அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது, மேலும் இது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏசி, டிவி வாங்கப்போறீங்களா! கொஞ்சம் பொறுங்க!! மத்திய அரசு தரவுள்ள தரமான சர்ப்ரைஸ்!!