இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் கடந்த சில ஆண்டுகளாக வேகமாக வளர்ந்து வருகின்றன. இது நாடு முழுவதும் பொருளாதாரத்தை மாற்றியமைத்து, பணமில்லா சமூகத்தை நோக்கி ஒரு பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது. யூனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) எனும் தளம் இந்த வளர்ச்சியின் மையமாக விளங்குகிறது. 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட UPI, இன்று உலகின் மிகப்பெரிய ரியல்-டைம் பேமென்ட் சிஸ்டமாக உருவெடுத்துள்ளது.
2025-ஆம் ஆண்டில் இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளன, இது நாட்டின் அன்றாட வாழ்க்கை, சிறு வணிகங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை பெரிதும் பாதித்துள்ளது.UPI-யின் வளர்ச்சி அசாதாரணமானது. 2025-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் UPI மூலம் 106.36 பில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.

இதன் மொத்த மதிப்பு சுமார் 143 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. நவம்பர் 2025-இல் UPI பரிவர்த்தனைகள் 20.47 பில்லியன் எண்ணிக்கையை எட்டியுள்ளன, மொத்த மதிப்பு 26.32 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 32 சதவீதம் அதிகரித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் உச்சம் தொட்டு 20.7 பில்லியன் பரிவர்த்தனைகளுடன் 27.28 லட்சம் கோடி ரூபாய் மதிப்பைப் பதிவு செய்தது. தினசரி சராசரியாக 682 மில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன, இது இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வலிமையை வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எப்போது எடுக்கலாம்? - மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு...!
இந்தியா முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்திருப்பதன் எதிரொளியாக 2000 க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளன. 2300 ஏடிஎம்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனை காரணமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம்களில் பணம் எடுப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் குறைந்த அளவு செயல்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. குறைந்த அளவு செயல்பாட்டில் உள்ள ஏடிஎம்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்... விரைவில் திருமலையில் புதிய வசதி அறிமுகம்...!