காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தருவது தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க ராணுவத்திற்குப் பிரதமர் முழுச் சுதந்திரத்தை அளித்திருந்தார். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது.

இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது. இந்த நிலையில் பாகிஸ்தான் இந்தியாவில் 15 முக்கிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டது.
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூரில் அப்துல் அசார் பலி; யார் இவர்? எந்த சம்பவத்தில் தொடர்புடையவர்?

இந்த ஏவுகணை தாக்குதல்களை இந்திய பாதுகாப்பு படை முறியடித்துள்ளது. இதையடுத்து மீண்டும் நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. அதன்படி சீனா தயாரிப்பான எச்க்யூ 9 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் பாகிஸ்தானின் லாகூரில் நிறுவப்பட்டு இருந்தது. இதனை இஸ்ரேல் நாட்டின் தயாரிக்கப்பட்ட HAROP ட்ரோன்கள் மூலம் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

இதனிடையே பாகிஸ்தானில், பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பெயரில் போட்டிகள் நடைபெற்று வரும் ராவல்பிண்டியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ட்ரோன் தாக்குதல் என்பது நடத்தப்பட்டுள்ளது. வானில் பறந்து வந்த ட்ரோன் மைதானத்தின் ஒருபகுதியாக இருந்த ரெஸ்டாரண்ட்டின் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் கிரிக்கெட் மைதானத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதனால் ராவல்பிண்டி மைதானத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அங்கிருந்து கிரிக்கெட் வீரர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாக். திட்டத்தை தவிடுபொடியாக்கிய இந்தியா.. பதிலடி தாக்குதல் முயற்சியில் படுதோல்வி!!