500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து அகற்றப்பட போகிறதா? வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டிய அவசியம் உள்ளதா? ரிசர்வ் வங்கி அதற்கு ஏதாவது அறிவிப்பு வெளியிட்டதா? இந்த கேள்விகள் சமீபமாக மக்கள் மத்தியில் பரவியுள்ளன. காரணம் சமூக ஊடகங்களில் வலம் வரும் ஒரு வைரல் பதிவு. சமூக ஊடகத்தளமான எக்ஸ் தளத்தில் ஒரு ஸ்கிரீன் ஷாட் வைரலாகி வருகிறது. அதில் ரிசர்வ் வங்கி 500 நோட்டை புழக்கத்திலிருந்து படிப்படியாக நீக்க முடிவு செய்துள்ளதாகவும் இனி ஏடிஎம்களில் 100 மற்றும் 200 நோட்டுகளே வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவலால் மக்கள் மத்தியில் பதற்றம் நிலவி வருகிறது. ஆனால் உண்மை என்ன தெரியுமா? ரிசர்வ் வங்கி உண்மையில் ஒரு உத்தரவை வங்கிகளுக்கு அனுப்பியுள்ளது. அதில் 500 ரூபாய் நோட்டை நிறுத்துவது குறித்த எந்த உத்தரவும் இடம் பெறவில்லை, வெறும் ஏடிஎம்களில் 100 மற்றும் 200 நோட்டுகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு பல்பு.. சசி தரூர் விளக்கத்தால் அம்பலம்!
ஏன் இந்த உத்தரவு தெரியுமா?

பெரும்பாலான பொதுமக்கள் ஏடிஎம்களிலிருந்து 500 நோட்டுகளை எடுத்த பிறகு அதற்கான சில்லறை கிடைக்காமல் சிரமப்படுகின்றன. சிறு கடைகள், பேருந்து கட்டணங்கள், டீ கடைகள் போன்ற இடங்களில் சில்லறை இல்லாதது ஒரு பிரச்சனையாக உள்ளது.இதை ஒட்டி மக்கள் சுலபமாக சிறிய நோட்டுகளை பெறவே இந்த உத்தரவு வந்துள்ளது. அதாவது 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து அகற்றப்பட போவதில்லை. இந்த நோட்டுகள் வழக்கம் போலவே புழக்கத்தில் தொடரும். சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை அப்படியே நம்பி பதற்றப்பட வேண்டாம். உண்மையான தகவலை மட்டும் நம்புங்கள். தற்போது 500 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருக்கிறது. வங்கிகளில் டெபாசிட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இதையும் படிங்க: நேற்று கட்சி தொடங்கியவன் எல்லாம் அடுத்த முதல்வர் என்கிறான்..! மு.க.ஸ்டாலின் வேதனை..!