ஐ.நா பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் பலரும் லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட கடினமான கேள்விகளை பாகிஸ்தானிடம் எழுப்பியதாக தெரிகிறது என்று ஐ.நா பாதுகாப்புக் குழு கூட்டம் குறித்து காங்கிரஸ் எம்.பி சசிதரூர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் விவாதித்தனர். இந்நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவரும், ஐக்கிய நாடுகள் சபை செயல்பாடுகள் குறித்த அறிந்தவருமான சசி தரூர் இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக விளக்கியுள்ளார். " நடந்த ‘சோக யதார்த்தம்’ குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

“பாகிஸ்தானுக்கு எதிரான எந்த ஒரு தீர்மானத்தையும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழு நிறைவேற்றாது. ஏனெனில், அதனை சீனா தனது வீட்டோ பவர் மூலம் கையாளும். பல நாடுகள் எதிர்க்கும் என்பதால், இந்தியாவுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றாது. பாதுகாப்புக் குழுவில் நடந்த விவாதங்கள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. அதிகாரபூர்வமற்ற விளக்கங்கள் மட்டுமே தற்போது வெளியாகியுள்ளன. இதுபோன்ற கூட்டங்களை உள் அறை விவாதங்கள் என்று அழைக்கப்படுகிறது. அப்படியான விவாதங்கள் பலவற்றில் நானும் இருந்திருக்கிறேன்.

பாதுகாப்புக் குழுவில் உள்ள 15 உறுப்பினர்களில் பாகிஸ்தானும் உண்டு. இந்தியா அந்த அறையில் இல்லை. அதனால், தங்களுக்கு ஒரு சாதமான சூழல் இருப்பதாக பாகிஸ்தான் நினைத்திருக்கும். ஆனால், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் பயங்கரவாதம் குறித்து உறுப்பினர்கள் கடுமையான கேள்விகள் கேட்டதால் கூட்டம், பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையவில்லை என்று தெரிகிறது. அதேபோல் பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியாவின் பதில், புரிந்துகொள்ளும் வகையில் தூண்டப்பட்டது என்பதை சர்வதேச சமூகம் ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.
இதையும் படிங்க: தமிழகத்திலிருந்து வங்கதேசத்தினர், பாகிஸ்தானியர் வெளியேற்றப்பட்டார்களா, இல்லையா..? டவுட்டு கிளப்பும் நயினார்.!

இந்த விவகாரத்தில் பாகிஸ்தானும் ஒரு தரப்பு என்பதால், இந்தியாவின் கருத்தினைக் கேட்காமல், பாகிஸ்தானின் கருத்தை மட்டும் கேட்டு ஒரு முடிவுக்கு வருவது சரியாக இருக்காது என்று சில உறுப்பினர்கள் கூறியிருக்கலாம். அதனால், சில உறுப்பினர்கள் பாதுகாப்புக் குழு கூட்டத்துக்கு பரிந்துரைத்திருக்கலாம்” என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திடீரென மொத்த தண்ணீரையும் திறந்துவிட்ட இந்தியா... வெள்ள அபாயம்... பதற்றத்தில் பாகிஸ்தான்..!