வங்காளதேசப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 23 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
வங்கதேசத்தில் போக்குவரத்து படகில் ஏற முயன்ற போது பேருந்து ஒன்று ஆற்றிற்குள் கவிழ்ந்த கோர விபத்தில், 23 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் காணாமல் போனதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று மாலை சுமார் 5.15 மணியளவில் தென்மேற்கு மாவட்டமான ராஜ்பாரியில் ள்ள தெளலாடியா பேருந்து நிலையத்தில் இருந்து டாக்கா நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் குழந்தைகள் உட்பட 40 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானோர் தங்களது ரம்ஜான் விடுமுறையை முடித்துக் கொண்டு தலைநகருக்கு திரும்பியுள்ளனர்.
இதையும் படிங்க: மீண்டும் பேருந்து விபத்து... நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த பஸ்... பயணிகளின் நிலை என்ன?
அப்போது பத்மா ஆற்றைக் கடப்பதற்காக பேருந்து மிதவைப் பாலத்தில் இருந்து படகுத்துறையை நோக்கி சென்று கொண்டிருந்த போது, சிறிய படகு ஒன்று மிதவைப் பாலத்தின் மீது மோதியுள்ளது. அதனால் ஓட்டுநரின் ஸ்டீயரிங் கட்டுப்பாட்டை இழந்ததால், பேருந்து ஆற்றில் கவிழ்ந்துள்ளது.
விபத்து குறித்த தகவலறிந்த உடனேயே தீயணைப்புத்துறை, காவக்துறை மற்றும் ராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 11 பயணிகள் நீந்தி கரைக்கு வந்ததாக கூறப்படுகிறது. கிரேன் உதவியுடன் பேருந்தை ஆற்றில் இருந்து மீட்ட போது அதில் 14 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் மோசமான வானிலை காரணமாக ஆறு மணி நேர முயற்சிக்குப் பிறகு, 2 பெண்களின் உடல்களை தீயணைப்புத்துறையினர் கண்டெடுத்தனர்.
ராணுவம் மற்றும் காவல்துறையின் உதவியுடன், தீயணைப்புத் துறையினரும் கடலோரக் காவல்படை ஆற்றில் மூழ்கி காணாமல் போனவர்களை தீவிரமாக தேடி வருகிறது.
இதையும் படிங்க: #BREAKING அதிகாலையிலேயே பயங்கரம்... நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலி...!!