இருப்பிடச் சான்று (Proof of Location) என்பது ஒரு நபர் அல்லது சாதனம் குறிப்பிட்ட இடத்தில் இருப்பதை உறுதிப்படுத்தும் தொழில்நுட்பமாகும். இது ஜி.பி.எஸ்., வை-ஃபை, புளூடூத் மற்றும் பிளாக்செயின் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நம்பகமான மற்றும் பாதுகாப்பான வழியில் இருப்பிடத்தை சரிபார்க்கிறது. இன்றைய டிஜிட்டல் உலகில், இந்தத் தொழில்நுட்பம் பல துறைகளில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

இருப்பிடச் சான்று முக்கியமாக பயன்படுத்தப்படும் துறைகளில் ஒன்று பாதுகாப்பு. உதாரணமாக, வங்கி பரிவர்த்தனைகளில் மோசடியைத் தடுக்க, ஒரு நபர் குறிப்பிட்ட இடத்தில் இருப்பதை உறுதிப்படுத்த இது உதவுகிறது. மேலும், லாஜிஸ்டிக்ஸ் துறையில், பொருட்களின் இருப்பிடத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும், விநியோகச் சங்கிலியில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இது பயன்படுகிறது.
இதையும் படிங்க: ஆதாரும் ஒரு அடையாளம்தான்!! தேர்தல் ஆணையத்தை வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்!!
பிளாக்செயின் அடிப்படையிலான இருப்பிடச் சான்று முறைகள் தரவுகளை மாற்ற முடியாதவாறு பதிவு செய்யும் திறனால் மிகவும் நம்பகமானவை. இது தேர்தல் முறைகளில் வாக்காளர்களின் இருப்பிடத்தை சரிபார்க்கவும், ஸ்மார்ட் ஒப்பந்தங்களை செயல்படுத்தவும் உதவுகிறது. மருத்துவத் துறையில், நோயாளிகளின் இருப்பிடத்தைக் கண்காணித்து அவசர சிகிச்சைகளை விரைவாக வழங்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.
எனினும், இருப்பிடச் சான்று தனியுரிமை குறித்த கவலைகளையும் எழுப்புகிறது. பயனர்களின் தரவு பாதுகாப்பாக கையாளப்படாவிட்டால், தவறாக பயன்படுத்தப்படலாம். எனவே, இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது கடுமையான தனியுரிமை விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்.
இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் சமூக ஊடகங்களிலும் செய்திகளிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 24ம் தேதி அன்று, பாட்னா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு அலுவலகத்தில் "டாக் பாபு" என்ற பெயரில் ஒரு நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழ் பிறப்பு, முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் செயல் தேர்தல் ஆணையத்தின் கவனத்தை ஈர்த்து, அரசியல் வட்டாரங்களில் புயலை கிளப்பியது. அதுமட்டுமென்றி விண்ணப்பத்தை சரிபார்த்து சான்றிதழ் வழங்க முடியாத அளவுக்கே அரசு நிர்வாகம் இருப்பதாக இணையத்தில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

பாட்னா மாவட்ட ஆட்சியர் தியாகராஜன் இது குறித்து விளக்கமளித்தார். "இது மிகவும் தீவிரமான விவகாரம். சான்றிதழ் ஜூலை 24 மாலை 3:56 மணிக்கு வழங்கப்பட்டு, இரண்டு நிமிடங்களில் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பின்னால் ஏதோ மர்மமான நோக்கம் இருக்கலாம்," என அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் அரசு அலுவலகங்களின் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. சிலர் இதை தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளுக்கு எதிரான நையாண்டியாகவும், மற்றவர்கள் இதை அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகவும் பார்க்கின்றனர். இந்த விவகாரம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அரசு சேவைகளில் வெளிப்படைத் தன்மையும், பொறுப்புணர்வும் மேம்பட வேண்டிய அவசியத்தை இது உணர்த்துகிறது.
இதையும் படிங்க: வாக்காளர் பட்டியலில் விடுபட்டோருக்கு வாய்ப்பு..! பீகாரில் தேர்தல் கமிஷன் புது அறிவிப்பு!!