இந்தியா - பாகிஸ்தான் இடையே உடனடி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானுடனான தாக்குதல் நிறுத்தம் தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை உடனே மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றத்தை கூட்ட வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமை தாங்கி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி அரசியல் கட்சிகளின் நம்பிக்கையை பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் கடந்த 18 நாட்களை நடந்த கொடூரமான பகல் கான் தாக்குதல்கள் மற்றும் அதற்கான வழிகள் குறித்து விவாதிக்கவும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க: #BIG BREAKING: பாகிஸ்தானின் தற்காப்பு திறன்களை இந்தியா அழித்துவிட்டது.. மத்திய அமைச்சக அதிகாரிகள் அறிவிப்பு..!
இதையும் படிங்க: #BIG BREAKING: அமெரிக்காவால் போர் நிறுத்தமா? இந்தியா மறுப்பு..!