ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பின்னணியில் பிரதமர் மோடி கருத்து ஒன்றை தெரிவித்தார். 'இந்தியாவுக்கு எதிரான நேரடி போரில் பாகிஸ்தானால் ஒரு போதும் வெற்றி பெற முடியாது. மோடியின் ரத்த நாளங்களில் ஓடுவது ரத்தம் அல்ல. கொதிக்கும் சிந்தூர் (குங்குமம்) தான் பாய்கிறது. மோடி இங்கே இருப்பதை பாகிஸ்தான் மறந்துவிட்டது. நான் நெஞ்சை நிமிர்த்தி, தலையை நிமித்து நின்று கொண்டிருப்பதை அவர்கள் மறந்து விட்டார்கள்.

ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தான் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பது இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. பாகிஸ்தானுடன் இனி வர்த்தகமோ, பேச்சுவோ இருக்காது, பேச்சு நடந்தால் அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டும் தான். இந்தியாவுக்கு எதிரான நேரடி போரில் பாகிஸ்தானால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தான் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் எனப் பேசினார்.
இதையும் படிங்க: உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்! பிரதமர் மோடியை தனியே சந்திக்க டைம் கேட்கும் மு.க.ஸ்டாலின்..!

இந்த நிலையில் இதனை விமர்சித்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு இருந்தார். அதில் மோடி ஜி, வெற்றுப் பேச்சுகளை நிறுத்துங்கள். எனக்கு பதில் சொல்லுங்கள்: 1. பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தானின் அறிக்கையை நீங்கள் ஏன் நம்பினீர்கள்? 2. டிரம்புக்கு பணிந்து இந்தியாவின் நலன்களை ஏன் தியாகம் செய்தீர்கள்? 3. கேமராக்களுக்கு முன்னால் மட்டும் ஏன் உங்கள் இரத்தம் கொதிக்கிறது? நீங்கள் இந்தியாவின் கவுரவத்தை சமரசம் செய்துவிட்டீர்கள் என விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் ராகுல்காந்தியின் பேச்சு தற்போது இணையத்தில் காங்கிரஸ் - பாஜக மத்தியில் வார்த்தை போராக உருவெடுத்து உள்ளது. ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விடுத்த எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது; இறுதியாக பிரதமர் மோடியின் உரையை நீங்கள் பார்த்திருப்பது தற்போது தெரிகிறது. இதற்காக நீங்கள் 10 நாட்கள் எடுத்துக் கொண்டாலும், இது நல்ல விஷயம் தான். உங்கள் கட்சி கடந்த காலங்களில் செய்து கொண்டிருந்ததைப் போல, மோடி அரசு காதல் கடிதத்தை ஒன்று அனுப்பவில்லை. வலிமையான பதிலடியை கொடுத்துள்ளோம், எனக் கூறினார்.

அதேபோல, பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதாப் பந்தாரி வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், காங்கிரஸ் இன்று பாகிஸ்தானுக்கு ஆதரவான போலி செய்திகளை பரப்பும் தொழிற்சாலையாக மாறிவிட்டதாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: என் ரத்த நாளங்களில் ஓடுவது கொதிக்கும் சிந்தூர்.. ஆவேசமாக பேசிய பிரதமர் மோடி..!