காஷ்மீரின் பஹல்காமில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தி 100க்கு மேற்பட்ட பயங்கரவாதிகளை வீழ்த்தியது இந்தியா. இதனை அடுத்து இந்தியா - பாக்., இடையே போர் சுழல் நிலவியது. இந்தியா விமானப்படை பாகிஸ்தானில் உள்ள விமான ஏவு தளங்களை அடித்து நொறுக்கியது. அப்போது நமது விமானங்கள சிலவற்றை பாக்., சுட்டு விழ்த்தியதாக ஆதாரமற்ற கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டது.

பாகிஸ்தானின் வதந்திகளுக்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்து ஆதாரங்களையும் காட்டியது. இந்த நிலையில் ஆப்பரேஷன் சிந்துார் ராணுவ நடவடிக்கை குறித்து தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகளை லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எழுப்பி வருகிறார். இந்திய ராணுவ நடவடிக்கை குறித்து முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து விட்டார். இதனால் நாம் இழந்த போர் விமானங்கள் எத்தனை? என்ற கேள்வியை ராகுல்காந்தி மீண்டும் மீண்டும் எழுப்பி வருகிறார்.
இதையும் படிங்க: பால்கனியில நிக்காதீங்க.. வீட்டை விட்டு வெளியே வராதீங்க..! வான்வழி தாக்குதலுக்கு தயாராகும் ராணுவம்..!

இதை மத்திய அரசு மறுத்து விட்டாலும், இது தொடர்பான விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பாஜ தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவரான அமித் மாள்வியா, பாகிஸ்தான் ராணுவத் தளபதி மற்றும் ராகுல்காந்தி இருவரையும் ஒப்பிட்டு, ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசி வரும் ராகுல்காந்தி, அந்த நாட்டின் உயர்ந்த, 'நிஷான் இ பாகிஸ்தான்' சிவிலியன் விருதுக்கு தகுதியானவர் என்ற ரீதியில் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள படத்தில் இந்தியா இழந்த போர் விமானங்கள் எத்தனை? என ராகுல்காந்தி கேட்பது போலவும், அவரை முதுகில் தாங்கி பிடித்தபடி பாகிஸ்தான் பிரதமர் இன்னும் சப்தமாக கேள் என கூறுவது போலவும் அமைந்துள்ளது.
இது காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காங்., மூத்த தலைவர் பவன் கெரா கூறியதாவது:நிஷான் இ பாகிஸ்தான் விருதை பெற்ற ஒரே இந்திய அரசியல் தலைவர் மொரார்ஜி தேசாய் மட்டும்தான். இருப்பினும், ஜின்னாவை மதசார்பற்ற தலைவர் எனக் கூறிய அத்வானி போன்றோர் அந்த விருதுக்கு தகுதியானவர் எனக் கூறலாம்.

அழைப்பிதழ் இல்லாமலேயே பாகிஸ்தானுக்கு சென்று, அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்ட தலைவருக்கும் கூட, நிஷான் இ பாகிஸ்தான் விருதை பெறுவதற்கு தகுதி உள்ளது. தாக்குதலை துவங்கி விட்டோம் என பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் அந்த விருதை பெற தகுதி உண்டு இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: சக்ஸஸான "ஆபரேஷன் சிந்தூர்".. குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்தார் பிரதமர் மோடி..!