ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். அப்போதிலிருந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே வார்த்தைப்போர் தொடங்கியது. இந்நிலையில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் 5 இடங்களில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 4 இடங்கள் என 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் 'சிந்தூர்' என்பது குங்குமம் என்று பொருள். அதாவது, பயங்கரவாதிகளின் தாக்குதலில் அன்புக் கணவர்களை இழந்து குங்குமத்தை இழந்த பெண்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இந்தத் தாக்குதலுக்கு 'சிந்தூர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற நடவடிக்கையின் கீழ், இந்திய விமானப்படை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) அமைந்துள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதையும் படிங்க: மோடிக்கு இது முன்னாடியே தெரியும்! அதான் அவரு காஷ்மீர் போகல.. பாக்., தாக்குதல் குறித்து கொளுத்திப்போட்ட கார்கே!

இதன்படி பவல்பூர், முரிட்கே, சியால்கோட், சகாம்ரு, குல்பூர், பிம்பர், கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும், சியால்கோட், பஹவல்பூர், சக் அம்ரு மற்றும் முரிட்கே உள்ளிட்ட பாகிஸ்தான் நகரங்களிலும் உள்ள தீவிரவாத முகாம்களில் மட்டும் துல்லிய தாக்குதலை இந்தியா நடத்தி உள்ளது.
நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு இந்திய ராணுவம் இந்த தாக்குதலை நடத்தியது. ஆனால் பாகிஸ்தான் ராணுவ தளங்களை குறிவைத்து எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு பலர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே "ஆபரேஷன் சிந்தூர்" வெற்றி பெற்ற நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில் சந்தித்த பிரதமர் மோடி, இந்தத் தாக்குதல் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
இதையும் படிங்க: போர் ஒத்திகை அலர்ட்.. சென்னையில் 4 இடங்கள் தேர்வு.. 54 ஆண்டுகள் கழித்து நடக்கும் சம்பவம்..!