காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. பயங்கரவாதிகள் கற்பனை செய்ய முடியாத அளவு அடி விழுந்தது. 100 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கிறோம் என்ற பெயரில் நேற்று இரவு அடாவடித்தனமாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களை குறி வைத்து போர் விமானம், ட்ரோன், ஏவுகணைகள் மூலம் தாக்கியது.துல்லியமான முறையில் தாக்குதலை முறியடித்த நம் ராணுவம், பாகிஸ்தான் அனுப்பிய F-16 ரக போர் விமானம் ஒன்றையும், இரண்டு JF-17 ரக போர் விமானங்களையும் சுட்டு வீழ்த்தியது. 8 ஏவுகணைகளையும் 50 ட்ரோன்களையும் வானிலேயே இடைமறித்து தவிடு பொடியாக்கியது.

பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்திய நிலையில் இந்தியாவில் உள்ள மக்களின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக எல்லை பகுதிகளில் உள்ள ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், ஹிமாச்சல் ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் வான் வெளி பாதுகாப்பை உடைத்து இந்தியா பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர் உள்ளிட்ட நகரங்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: பிளாக் அவுட் என்றால் என்ன? பஞ்சாபில் பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கடைபிடிப்பு?

இதனால் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் எல்லையோர மாநிலங்களான குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர்கள், தங்களது மாநிலங்களில் உள்ள உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தை இந்தியா தாக்கி உள்ளது. அதற்கு பதிலடி தர பாகிஸ்தானும் டில்லியை தாக்க முற்படலாம் என்பதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டு, அவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தியா கேட் பகுதிக்கு செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் 532 கி.மீ., தொலைவையும்; ராஜஸ்தான் 1,070 கி.மீ., தொலைவுள்ள எல்லையையும் பாகிஸ்தானுடன் பகிர்கின்றன. எனவே எல்லை முழுதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் ஆறு எல்லை மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அனைத்து போலீசாரின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் ராஜஸ்தானில் ஐந்து எல்லை மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சர்வதேச எல்லைக்கு அருகில், நிர்வாக மற்றும் காவல்துறை ஊழியர்களுக்கான விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தில் உச்சபட்ச விழிப்புணர்வு மற்றும் தயார்நிலையில் இருக்கவும், நிலைமையை தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மாநிலமாக இல்லாவிட்டாலும், பஞ்சாப் எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களான ஹமீர்பூர், உனா, பிலாஸ்பூரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வீட்டின் ஜன்னலை விட்டு விலகி இருக்க வேண்டும். பால்கனியில் நிற்க கூடாது எனவும் விமானப்படை மையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விளக்குகளை எரிய வைக்க வேண்டாம். சைரன் அடித்தவுடன் செய்திகளை . மக்கள் அச்சப்பட தேவை இல்லை. ஆயுதப்படைகள் பணியில் உள்ளன. மக்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து ஆதரவு அளிக்க வேண்டும் என பஞ்சாப் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: பஞ்சாப் நோக்கி பாய்ந்த ஏவுகணை.. எல்லைமீறும் பாக்., தவிடுபொடியாக்கிய இந்தியா..!