இந்தியாவில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு என்ற பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது உலக அளவிலான புவிசார் அரசியல் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள ஒரு பெரிய தாக்கம். முக்கிய காரணம் மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல்.
மத்திய அரசு சமீபத்தில் எஸ்மா சட்டத்தின் கீழ் அரிதாகப் பயன்படுத்தப்படும் அவசர அதிகாரங்களை இயக்கி, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான விநியோகத்தில் சில சிரமங்கள் எழுந்துள்ளன.

இதற்கு முக்கிய காரணம் மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளாகும். இந்தியா தனது LPG தேவையில் சுமார் 50-60% அளவை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. அதில் பெரும்பாலானவை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருகின்றன. இப்போது ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக எதிர்காலத்தில் விநியோக சங்கிலி பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பாஜக ஆளும் மாநிலத்தில் தான் பெண்களுக்கு பாதுகாப்பில்லை... முதல்வர் ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு..!!
இந்தியாவில் இயங்கும் அனைத்து பொது மற்றும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் தங்கள் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் LPG-யை பொது துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களான Indian Oil Corporation (IOC), Bharat Petroleum Corporation Ltd (BPCL), Hindustan Petroleum Corporation Ltd (HPCL) ஆகியவற்றுக்கு மட்டுமே வழங்க வேண்டும். இந்த LPG-யை வீட்டு சமையல் பயன்பாட்டுக்கான நுகர்வோர்களுக்கு மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும் என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போராடும் வருவாய் துறை ஊழியர்கள்.. அடக்கு முறையை ஏவும் திமுக... டிடிவி தினகரன் கண்டனம்..!!