மே 18ஆம் தேதி தஞ்சையில முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்ச்சியை தலைமையற்று நடத்தி இருந்தாங்க வி.கே.சசிகலா. அங்கேயே ‘தமிழின கூடிகள் எழுச்சி நாள்’ அப்படிங்கிற ஒரு நிகழ்வையும் நடத்தினாங்க. கிட்டத்தட்ட தெற்கில் இருக்கக்கூடிய 40க்கும் மேற்பட்ட பல்வேறு சமுதாய அமைப்புகள் சசிகலா நடத்தின இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றாங்க.

கொடநாட்டில முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா அவங்களுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற விஷயத்தையும் முன்னெடுத்திருக்காங்க. ஆனால் அதுக்கு திமுக அரசு தடை போடுவதாகவும், அதற்கு எதிராக தீவிரமாக சசிகலா வேலை பார்த்து வருவதாகவும், அதை திமுக அரசு தடை போடுது அப்படின்னு அதற்கு எதிராகவும் தீவிரம் காட்ட றாங்க ஏன் இந்த இரண்டு அஜெண்டா மட்டுமில்லாம, தெற்கு மாவட்டங்களை குறி வைத்து தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டிருக்காங்களாம் வி.கே.சசிகலா.

இதுதொடர்பான பின்னணி என்னவென விசாரித்தால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கு மண்டலஃபார்முலாவை பக்காவா வச்சியிருக்காராம். அதே நேரத்துல சவுத்ல அவருக்கானஃபார்முலா இல்லை. இப்ப அந்த வெற்றிடத்துல சவுத்துக்கான பேஸாக தன்னை நிலைநிறுத்தினா முன்னிலைப்படுத்தினா தன்னுடைய பலத்தை உருவாக்கினா ஆட்டோமேட்டிக்கா அதிமுக இறங்கி வருவாங்க அப்படிங்கறதுதான் விகே சசிகலாவின் கணக்கா இருக்கு. இந்த சூத்திரத்தை தான் சீக்ரெட்டா டெல்லியும் சசிகலாவுக்கு சொல்லி கொடுத்திருக்கு. அதைத் தான் இப்ப செய்ய தொடங்கி இருக்காங்க சசிக்கலா அப்படின்னும் தெரிவிக்கிறாங்க டெல்டா ஆதரவாளர்கள்.
இதையும் படிங்க: டம்மி அப்பாவும், மகனும் சொல்லுவது எல்லாமே பொய்.! விளைவை பார்த்தீர்களா! இபிஎஸ் ஆவேசம்..!
இதையும் படிங்க: “லிஸ்ட் தயார்” அதிமுகவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி வைத்தியம்... தமிழக பாஜகவின் பலே திட்டம்...!