உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் கைலாவன் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மயானத்தில், கார் ஒன்று நீண்ட நேரமாக நின்றுள்ளது. இதனை பார்த்து சந்தேகமடைந்த கிராம மக்கள், அங்கு சென்று கார் கதவை தட்டியபோது, உள்ளே இருந்து ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் வெளியே வந்துள்ளார்.

மேலும் காரில் ஒரு பெண் இருந்ததும், அவருடன் அந்த நபர் தகாத முறையில் இருந்ததும் தெரியவந்தது. சுடுகாட்டு பகுதிக்கு யாருமே வர மாட்டார்கள் என்று நினைத்து, அவர் அந்த பெண்ணை அங்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதனை கிராம மக்கள் வீடியோ எடுப்பதை பார்த்த அந்த நபர், நான் செய்தது தவறு, என்னை மன்னித்து விடுங்கள் என்று அங்கிருந்தவர்கள் காலில் விழுந்துள்ளார். மேலும் அந்த பெண் முகத்தை மூடிக்கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றார். ஆனால் பொதுமக்கள் அவர்களை விடவில்லை. இருவரையும் சூழ்ந்து கொண்டு கையும் களவுமாக பிடித்தனர்.
இதையும் படிங்க: முருக பக்தர்களாக வந்த நீங்கள் வீரபாகுவாக செல்ல வேண்டும்.. அண்ணாமலை ஃபயர் ஸ்பீச்..!

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் சிக்கிய அந்த நபர், பாஜக நிர்வாகி பெயர் ராகுல் வால்மீகி என்பதும் அவர் பாஜகவின் பட்டியல் அணி மாவட்ட செயலாளராக பொறுப்பில் உள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமானதும், தகாத உறவில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கட்சி மேலிடம் ராகுல் வால்மீகியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது. ஆனால், இந்தச் சம்பவம் குறித்து இதுவரை யாரும் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கவில்லை என்றும், அப்படி யாராவது புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் அந்த கோலத்தில்.. மனைவியின் மூக்கை கடித்து துப்பி ஆத்திரத்தை தீர்த்துக்கொண்ட கணவர்..!