"வந்தே மாதரம்" உருவாகி 150 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு கோவை வ உ சி மைதானத்தில் உள்ள, வ உ சி சிலைக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பாஜக தொண்டர்களுடன் வந்தே மாதரம் பாடலை பாடினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும் போது :
வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு நாடு முழுவதும் இதனை மக்கள் கொண்டாட வேண்டும், இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தி, முன்னின்று துவக்கி வைத்துள்ளார்.
மேலும் விடுதலை போராட்ட தியாகி நினைவிடங்களில் மாணவ ,மாணவிகளுடன் இணைந்து வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்றார். இது கட்சி சார்பின்றி நடைபெறும் நிகழ்ச்சி, வந்தே மாதரம் பாடல் பாஜக கட்சியின் பாடல் அல்ல.
இதையும் படிங்க: சாட்டையை சுழற்ற தயாராகும் விஜய்... இனி தவெக மா.செ.க்களுக்கு தினம் தினம் அதிரடி...!
விடுதலை போராட்டத்தில் அதிகமான பங்களிப்பு வழங்கியது தமிழகம். ஆனால் வந்தே மாதரம்150 ஆண்டு விழாவை தமிழக அரசு கொண்டாட மறந்து விட்டது.
வ.உ.சி கோவையில் தான் செக்கு இழுத்து கடுமையான தண்டனையை அனுபவித்தார். இதனால் இங்கு அனுமதி கட்சி சார்பு இல்லாமல், வந்தே மாதரம் பாடலை மாணவ, மாணவிகளுடன் பாட வேண்டும் என அனுமதி கேட்டோம், ஆனால் மூன்று நாட்கள் கழித்து நேற்று அனுமதி இல்லை காவல் துறை மறுத்துள்ளனர்.
150 மாணவ, மாணவிகள் வந்தே மாதரம் பாடல் பாடுவதில் என்ன சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும்? வேண்டுமென்றே திமுக தேச பக்தியை வளர்க்கும் செயலை தடுக்கிறது. காவல் துறை மூலம் அனுமதி மறுக்கின்றனர். மறைமுக அழுத்தம் கொடுக்கிறது.
தமிழகம் முழுவதும் தேச பக்தர்களாக தான் இருக்கிறார்கள் அதனை இம்மாதிரியான உத்தரவு மூலம் தடுக்க முடியாது. இப்போது பாஜக சார்பில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தெருக்கள் தோறும் வந்தே மாதரம் பாடலை பாட ஏற்பாடு செய்துள்ளோம்.
எஸ்.ஐ.ஆர் தொடர்பாக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் நாடகம் நடத்தி வருகின்றனர். திமுக திறமையின்மை மற்றும் ஊழலை மறைப்பதற்காக ஏதாவது மத்திய அரசு மீது திசை திருப்பி வருகின்றனர்.
இது ஏதோ புதிதாக கொண்டுவரப்பட்டது போல பேசுகிறார்கள். 2002 ல் இருந்தே எஸ்.ஐ.ஆர் செயல்படுத்தப்பட்டுள்ளது. அப்போது திமுக வாயை திறக்கவில்லை. மக்கள் கடுமையான அதிர்ப்தில் உள்ளனர். சரிந்து வரும் திமுக அரசை ஏதாவது செய்ய முதல்வர் முயல்கிறார். அதனை மறைக்க மத்திய அரசை ஏதாவது பேச வேண்டும் என பேசுகிறார்கள்.
பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர் நீக்கவிட்டதாக கூறினார்கள். நானும் பிரச்சரத்திற்கு சென்றேன். பீகாரில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது. ஆனால் ஒரு பூத்தில் கூட வாக்கு உரிமை பறிக்கப்பட்பறிக்கப்பட்டதாக ஒரு புகார் கூட வரவில்லை. அதற்கு என்ன அர்த்தம். பீகாரில் ஒழுங்காக தீவிர வாக்காளர் திருத்தம் நடைபெற்றுள்ளது என்று அர்த்தம். பீகாரில் உங்கள் நிர்வாகியிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பிறகு பொய் பிரச்சாரம் செய்யுங்கள்.
தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகளை மாநில அதிகாரிகளை நம்பி தான் மேற்கொள்ள வேண்டும். ஒரு புறம் எஸ்.ஐ.ஆர் வை எதிர்க்கும் திமுக, மற்றொரு புறம் பணிகளை செய்யும் பூத் லெவல் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள், விண்ணப்பங்களை பறிக்கிறார்கள்.
வாக்காளர் பட்டியல் தூய்மையாக, நேர்மையாக இருக்க வேண்டும் என்று தான் தேர்தல் ஆணையம் இந்த முயற்சியை எடுத்துள்ளது. நமது வாக்காளர்கள் ஒருவர் கூட விடுபட கூடாது என்பது தான் நோக்கம். மேலும் இதில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
செங்கோட்டையனை கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக அழைத்தார்கள் என்பதை அவர் தான் கூற வேண்டும். எங்களை பொருத்தவறை அதிமுக கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டிய எண்ணமும் கிடையாது. கூட்டணியை பலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தான் எங்களுக்கு டெல்லியில் அந்த தகவல்.
சினிமா பாடலை அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது புதிது அல்ல. இங்கு நெடுங்காலம் அரசியலும், சினிமாவில் ஒன்றாக பயணித்து வரும் சூழலில் சினிமா நடிகர் அரசியலுக்கு வரும் போது இதெல்லாம் நடப்பது தான். இதை ஆச்சரியமாக பார்க்கவில்லை.
திமுகவை வீழ்த்துவேன் என கூறும் விஜய், திமுகவை தனியாக எப்படி வீழ்த்த முடியும், அதற்கு என்ன பலம் அவருக்கு இருக்கிறது. திமுக அரசு மாற்றப்பட வேண்டும் என்பதில் யாருக்கு மாற்று கருத்தும் இல்லை.
ஒன்றாக இணைய வேண்டும் என அனைத்து பாஷையிலும் கூறுகிறார் ஆனால் யாருடன் ஒற்றிணைய வேண்டும் என்கிறார்.? என்றார்.
இதையும் படிங்க: சினிமாவை வெச்சுகிட்டு தேர்தல்ல ஜெயிக்க முடியுமா? - விஜய் குறித்து கே. பி. முனுசாமி விமர்சனம்...!