பொலிவியாவின் தலைநகரான லா பாஸை ஒட்டியுள்ள எல் ஆல்டோ நகரில் மாலை 6 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது . பொலிவிய விமானப்படையின் C-130 ஹெர்குலஸ் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவ ஹெர்குலஸ் விமானம் சாண்டா குரூஸிலிருந்து புறப்பட்டு, புதிதாக அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை நாட்டின் பிற பகுதிகளுக்கு கொண்டு சென்று கொண்டிருந்தது. சாண்டா குரூஸ் நகரத்திலிருந்து புறப்பட்ட இராணுவ விமானம், தரையிறங்கிய பிறகு, ஓடுபாதையில் இருந்து விலகி, அருகிலுள்ள அவென்யூவில் சறுக்கி விழுந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். எல் ஆல்டோவில் மோசமான வானிலைக்கு மத்தியில், பொலிவியாவின் மத்திய வங்கியிலிருந்து புதிய ரூபாய் நோட்டுகளை ஏற்றிச் சென்ற விமானம், பரபரப்பான அவென்யூவில் மோதியது. பொலிவிய விமானப்படை விமானம் விபத்துக்குள்ளான அவென்யூவில் பல வாகனங்களும் சேதமடைந்தன.
இந்த விபத்தால் எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக தேசிய விமான நிறுவனமான பொலிவியானா டி அவியாசியன் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் தங்கள் விமானக் குழுவைச் சேர்ந்தது அல்ல என்றும் தேசிய விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கோர விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாகவும், 30 பேர் படுகாயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர்கள் விமானத்தில் இருந்த பயணிகளா அல்லது விமான நிலையத்திற்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் வாகனங்களில் இருந்தவர்களா என்பதை குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
விபத்தின் போது பறந்த ரூபாய் நோட்டுகளை மக்கள் அள்ளிச் செல்ல வந்ததாகவும், அதனை தடுக்க காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விமான விபத்து தொடர்பான நிறைய வீடியோக்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
BREAKING: Bolivian Air Force plane crashes in El Alto, reports of multiple victims. pic.twitter.com/BzFyKzJ10v
— AZ Intel (@AZ_Intel_) February 27, 2026
இதையும் படிங்க: அஜித் பவார் மரணம்..! விமானத்தில் நடந்தது என்ன? கருப்பு பெட்டியை மீட்டு தீவிர விசாரணை..!
இதையும் படிங்க: 2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு... காரணம் என்ன?