காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கிடையே தான் இந்தியா பாகிஸ்தான் எல்லையானா அட்டாரி-வாகா பகுதியில் உள்ள எல்லை கதவுகள் அதிரடியாக மூடப்பட்டன. முன்னதாக இந்தியாவில் தங்கி இருந்த பாகிஸ்தானியர்கள் அந்த எல்லைகள் வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுமார் 12 நாட்கள் பாகிஸ்தான்-இந்தியா எல்லைகள் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் இன்று முதல் அட்டாரி-வாகா எல்லைகளில் மீண்டும் கொடி நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என எல்லை பாதுகாப்பு படை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்திய BSF வீரரை இப்படியெல்லாம் சித்ரவதை செய்தார்காளா? பாக். செய்த கொடுமை; வெளியான அதிர்ச்சி தகவல்!!

அதன்படி இன்று முதல் அட்டாரி வாகா எல்லையில் தினமும் வழக்கம்போல் கொடி ஏற்றம், இறக்கம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. முன்னதாக அதிகாரிகள் கூறும்போது, அட்டாரி, ஹுசைனிவாலா மற்றும் சாட்கி எல்லைகளில் தினமும் மாலையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்கள் பார்வையிடலாம். என்றாலும் பாகிஸ்தான் வீரர்களுடன், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்கள் கைகுலுக்க மாட்டார்கள். கொடி இறக்கப்படும் போது முன்பு அறிவிக்கப்பட்டது போல் வாயில்கள் திறந்திருக்காது என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்திய - பாகிஸ்தான் எல்லைகளின் நடத்தப்படும் கொடியிறக்க நிகழ்வை நாளை முதல் பொதுமக்கள் காண அனுமதிக்கப்படுவர் என்று எல்லைப் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது. பஞ்சாப்பின் ஜலந்தர் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எல்லைப் பாதுகாப்புப் படைப்பிரிவு, இந்த பின்வாங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை மாலை முதல் மீண்டும் நடைபெறும். இன்று ஊடகங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும். நிகழ்வு மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொடரும் அழுச்சாட்டியம்.. பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் இந்திய வீரர்கள் காயம்..!