இன்று ஆகஸ்ட் 25, தமிழக மக்களின் இதயங்களில் என்றும் நீங்காத இடம் பிடித்துள்ள கேப்டன் விஜயகாந்தின் பிறந்த தினம். 1952 ஆம் ஆண்டு இதே நாளில் மதுரை மண்ணில் விஜயராஜ் அழகர்சாமியாகப் பிறந்த அவர், பின்னர் விஜயகாந்த் என்ற பெயரில் தமிழ் திரையுலகிலும் அரசியலிலும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதினார். சிறுவயதிலேயே தாயை இழந்த அவர், தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். படிப்பில் ஆர்வம் குறைவாக இருந்தாலும் சினிமா மீதான ஆர்வம் அவரை சென்னை நோக்கி இழுத்துச் சென்றது.
1979 இல் இனிக்கும் இளமை படத்தில் அறிமுகமான அவர், படிப்படியாக தனது வலுவான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.சட்டம் ஒரு இருட்டாறை, வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, புலன் விசாரணை, சத்ரியன் போன்ற படங்களில் அவர் செய்த பாத்திரங்கள் அவருக்கு புகழை தேடித் தந்தன. குறிப்பாக கேப்டன் பிரபாகரன் படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் அவருக்கு கேப்டன் என்ற அழியாத பட்டத்தை வழங்கியது. அந்தப் பெயர் பின்னர் அவரது வாழ்க்கையின் அடையாளமாக மாறியது.

நேர்மையான போலீஸ் அதிகாரி, கிராமத்து மக்களின் பாதுகாவலன், நீதிக்காக போராடும் வீரன் எனப் பல வேடங்களில் அவர் தோன்றினார். கருப்பு எம்ஜிஆர், புரட்சிக் கலைஞர் என்றழைக்கப்பட்ட அவர், திரையில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் எளிமையையும் மனிதநேயத்தையும் பேணினார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக உயர்ந்தார். தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடிய பெருமைக்கு சொந்தக்காரர். அவரது பிறந்தநாளில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் நினைவு கூர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்டாலின் vs காங்கிரஸ்: ‘எட்டப்பன்’ யார்? தமிழக அரசியலில் திடீர் மோதல்! பின்னணியில் என்ன நடக்கிறது?
ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். அவரின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் பிரேமலதா விஜயகாந்த் இருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் கேப்டன் புகழ் வாழ்க என்றும் தெரிவித்தார். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்த் திரைத்துறை ஆளுமையும்,
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மறைந்த அன்புச் சகோதரர் “பத்ம பூஷன்” விஜயகாந்தின் பிறந்தநாளான இன்று, அவர்தம் கலைத்துறைச் சாதனைகளையும் பொதுவாழ்வில் அவர் தமிழக மக்கள் மீது காட்டிய பேரன்பையும் நினைவுகூர்கிறேன் என்று கூறினார். மண்ணை விட்டு மறைந்தாலும், ‘கேப்டன்’ என்ற பெயரும், உங்கள் புகழும் காலம் கடந்து நிலைத்திருக்கும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய் கூட்டம் நடந்த அதே நேரம்... ஸ்டாலின் வீட்டில் நடந்த ‘ரகசிய’ சந்திப்பு! திமுக எடுத்த புதிய முயற்சி!