காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பெண்களின் கண் முன்னே அவர்களின் கணவர்களை சுட்டுக் கொன்றனர். இதில் 26 பேர் பலியாயினர்.பெண்களின் கண்ணெதிரிலேயே கணவன் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் விதமாக ஆப்பரேஷன் சிந்துார் என்ற ராணுவ நடவடிக்கையை நம் நாடு நேற்று முன்தினம் துவங்கியது. அதன்படி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட 9 பயங்கரவாத முகாம்களை நம் ராணுவம் நிர்மூலமாக்கியது. அதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதன் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு நம் பதிலடி இதோடு முடிந்து விட்டது. பாகிஸ்தானும் இதை புரிந்து கொண்டு அமைதி காத்திருக்க வேண்டும்.ஆனால் அப்படி செய்யவில்லை. அன்று பகல் முடிந்து இரவு வந்ததும் தனது வேலையை காட்டியது. காஷ்மீர் முதல் ராஜஸ்தான் வரை எல்லையில் இருந்த 15 நகரங்களை குறி வைத்து ட்ரோன், ஏவுகணைகளை அனுப்பி குண்டு வீசியது. அவை நம் எல்லைக்குள் நுழைவதற்கு முன்பாகவே நம் வான் பாதுகாப்பு கவசங்கள் இடைமறித்து அழித்து விட்டன.
இதையும் படிங்க: பால்கனியில நிக்காதீங்க.. வீட்டை விட்டு வெளியே வராதீங்க..! வான்வழி தாக்குதலுக்கு தயாராகும் ராணுவம்..!

இப்போது பாகிஸ்தான் நம்மை தாக்கி இருக்கிறது. இதற்கு பதிலடி கொடுத்தாக வேண்டிய கட்டாயம் வந்தது. உடனே இஸ்ரேல் நமக்கு தந்த ஹார்பி ரக ட்ரோன்களை கொத்து கொத்தாக அனுப்பி அதே இரவில் பதிலடி கொடுத்தது இந்தியா. லாகூரில் இருந்த பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் குறி வைக்கப்பட்டன. வான் பாதுகாப்பு கவசம் உடைத்து நொறுக்கப்பட்டது. லாகூர் கிரிக்கெட் மைதானத்திலும் குண்டு விழுந்தது. இதில் பாகிஸ்தானுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. பதிலுக்கு பதில் சரியாக போய் விட்டது என்று பாகிஸ்தான் விட்டிருக்கலாம்.

இந்த முறையும் அதை செய்யவில்லை. பதிலடிக்கு பதிலடி என்ற பெயரில் நேற்று இரவு வேலையை காட்டியது. சரியாக 8:45 மணி முதல் 9:20 வரை இந்தியாவின் 3 மாநிலங்களை குறி வைத்து குண்டு மழை பொழிந்தது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களின் முக்கிய நகரங்களில் ஏவுகணை, ட்ரோன்களை ஏவி குண்டு வீசியது. ஆனால் இப்படியொரு தாக்குதல் நடக்கும் என்பதை 3 மணி நேரம் முன்பே நம் உளவுத்துறை மோப்பம் பிடித்து ராணுவத்தை உஷார் செய்திருந்தது. இதனால் ஏற்கனவே எல்லை பகுதியில் இருந்த ரஷ்யாவின் S-400, ஆகாஷ், MRSAM மற்றும் Zu-23 உள்ளிட்ட ஏவுகணை, ட்ரோன் தடுப்பு கருவிகளை இந்தியா ஆக்டிவேட் செய்திருந்தது.

இதனால் எல்லைக்குள் புகுந்த ட்ரோன்கள், ஏவுகணைகள் ஒன்றன் பின் ஒன்றாக சுட்டு வீழ்த்தப்பட்டன. ஜம்மு, பதான்கோட், உதம்பூர் ராணுவ நிலைகளை குறி வைத்தும், முக்கியமான குடியிருப்பு பகுதிகளை குறி வைத்தும் ட்ரோன்கள் அனுப்பப்பட்டு இருந்தன. ஜம்மு ஏர்போர்ட்டிலும் ஒரு ட்ரோன் குண்டு வீசியது. அனைத்து ட்ரோன்களையும் இந்தியா வானிலேயே இடைமறித்து அழித்தது. மொத்தம் 50 ட்ரோன்களை தகர்க்கப்பட்டன. இவை இல்லாமல் மொத்தம் 8 ஏவுகணைகளை இந்தியா இடைமறித்து அழித்தது. இது பாகிஸ்தானுக்கு பெருத்த அடியாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் டெல்லியில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தானின் தாக்குதல், இந்தியாவின் பதிலடி உள்ளிட்டவை குறித்து ராஜ்நாத் சிங்கிடம் முப்படை அதிகாரிகள் விளக்கினர். அடுத்தகட்ட நகர்வு குறித்து முப்படை தளபதிகள், பாதுகாப்புத்துறை செயலாளர்களுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் இந்திய ராணுவ தளபதிக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ராணுவத்துக்கு பணியாளர்களை சேர்க்கவும், நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள ராணுவ வீரர்களை உடனடியாக போர் களத்துக்கு அழைக்கும் பணியை ராணுவ தளபதி மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எவிடன்ஸ் எங்க சாரே? லைவில் சிக்கிய கவாஜா ஆசிஃப்..! இந்திய விமானத்தை சுட்டதாக சொன்னது டூப்பா?