தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீனிவாசன். வில்லனிசத்தில் மிரட்டும் இவருக்கு பெயர் பெற்று கொடுத்தது என்னவோ திருப்பாச்சியில் சனியன் சகடை கதாபாத்திரமும், சாமியில் பெருமாள் பிச்சை என்ற கதாபாத்திரமும் தான். அந்த அளவிற்கு அவரது பேச்சு, மிரட்டும் ஸ்டைல் மக்கள் மனதில் நன்கு பதியவைத்தது.

அது தவிர தமிழில் கோ, சகுனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, சாமி 2 உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார் கோட்டா ஸ்ரீனிவாசன். இவர் 1978 ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் பிராணம் கரீது என்ற படத்தில் அறிமுக அறிமுகமானார். திரை பயணத்தில் வில்லன், துணை நடிகர் என 750 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர், ஆந்திர அரசால் வழங்கப்படும் நந்தி விருதினை ஒன்பது முறை பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: போட்டாரு ED.. ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க.. சீமான் செம்ம கலாய்..!
மேலும் திரையுலகில் கோட்டா ஸ்ரீனிவாசனின் பங்களிப்பிற்காக 2015 ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஒரு நடிகராக மட்டுமில்லாமல் இந்தியன், நரசிம்மா, பாபா, சிவாஜி ஆகிய தமிழ் படங்களின் தெலுங்கு டப்பிற்கு குரல் கொடுத்துள்ளார். மேலும் இரண்டு படங்களில் பாடவும் செய்திருக்கிறார்.

வயது முதிர்வு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு வீட்டில் ஓய்வு எடுத்து வந்த கோட்டா ஸ்ரீனிவாசன், ஜூலை 13-ஆம் தேதியான இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்திலேயே காலமானார். அவரது மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் திரையுலகினர் பலர் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்ட உடலுக்கு, நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண் பிரகாஷ்ராஜ், மற்றும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று மறைந்த நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் உடலுக்கு இரங்கல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஒரு சிறந்த நடிகர். அவருடைய இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், 7 நந்தி விருதுகளை பெற்றுள்ளார். மேலும் 5 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். நான் முதலமைச்சராக இருந்தபோது, மக்கள் பிரதிநிதியாக அவருடன் இணைந்து பணியாற்றிய தருணம் மகிழ்ச்சியானது. அவர் மிகப்பெரிய அளவில் மக்கள் பணியை ஆற்றியுள்ளார் என்றார்.
இதையும் படிங்க: பள்ளி குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000... வெளியான சூப்பர் அறிவிப்பு!!