ஆந்திர மாநிலம் கடப்பவில் மூன்று நாட்கள் நடைபெறும் தெலுங்கு தேச கட்சியின் மகாநாடு நேற்று தொடங்கியது. இதில் பேசிய அக்கட்சியின் தேசிய தலைவரும் ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடப்பா நிலத்தில் முதல் முறையாக மகாநாடுவை ஏற்பாடு செய்துள்ளோம். இந்த மகத்தான நாள் வரலாற்றை உருவாக்கும். ஒருங்கிணைந்த கடப்பா மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதியில் 7 இடங்களை நாம் வென்றோம். இந்த முறை, நாம் கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டும். பத்தில் பத்து இடங்களை வெற்றி பெற வேண்டும். 2024 தேர்தலில் கட்சியின் வெற்றி அசாதாரணமானது.

மாநிலம் முழுவதும் 93 சதவீத ஸ்ட்ரைக் ரேட்டுடன் மிக பிரம்மாண்டமான வெற்றியை கூட்டணி கட்சிகள் பெற்றோம். கட்சி இவ்வளவு வெற்றியைப் பெறுவதற்கு மஞ்சள் வீரர்கள்தான் காரணம். நான் ஜனசேனா மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தேன் எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக் கொடியை ஏந்திய தொண்டர்களால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமானது. நம் கட்சியின் பணி முடிந்துவிட்டது என்று சொன்னவர்கள் தான் காணமல் போனார்கள். 43 ஆண்டுகால அரசியலில் நாட்டில் வேறு எந்தக் கட்சியும் சந்திக்காத நெருக்கடிகளை நாம் சந்தித்துள்ளோம்.
இதையும் படிங்க: வந்தே மாதரம்.. உணர்ச்சி பொங்க முழங்கிய கிராமம்.. முரளி நாயக் உடலுக்கு பவன் கல்யாண் அஞ்சலி..!

முந்தைய அரசாங்கம் ஆட்சியைக் கொலைகார அரசியலாகவும், கோஷ்டிவாதமாகவும் மாற்றியது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அதன் அழிவுகரமான ஆட்சியால் மாநிலத்தை முற்றிலுமாக அழித்துவிட்டது.
இதைக் கேள்வி கேட்ட தெலுங்கு தேசம் கட்சி ஆர்வலர்கள் மற்றும் தலைவர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன. அவர்கள் வேட்டையாடப்பட்டனர். துரத்தப்பட்டனர். சட்டவிரோத வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் நீங்கள் கொடியைத் தாழ்த்தாமல் போராடியதற்காக நான் உங்களைப் பாராட்டுகிறேன். நமது மஞ்சள் சிங்கம், ஆர்வலர் சந்திரய்யா படுகொலை செய்யப்பட்டபோதும், அவர் "ஜெய் தெலுங்கு தேசம்" என்று கூறி தனது இறுதி மூச்சை விட்டார். அவர் நம் உத்வேகம்.

"அந்த உத்வேகம் கட்சியை இயக்கும்". "நாம் எதிர்க்கட்சியில் இருந்தபோது ஊழலுக்கு எதிராகப் போராடினோம்." ஆட்சிக்கு வந்தால், ஊழல் இல்லாத நிர்வாகத்தை வழங்குவோம். மக்களின் சொத்துக்களையும் உரிமைகளையும் நாங்கள் பாதுகாத்துள்ளோம். நேர்மறையான அரசியலுடன் அரசியலில் மதிப்புகளைக் கொண்டு வந்த ஒரே கட்சி தெலுங்கு தேசம் மட்டுமே. தெலுங்கு மாநிலங்களில் எந்தக் கட்சியைப் பார்த்தாலும், அவர்கள் அனைவரும் தெலுங்கு தேசம் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள்தான். நம் கட்சியின் வரலாற்றை யாராலும் கிழித்து எறிய முடியாது. அதை அழிக்க முடியாது.

"கட்சியின் கொள்கைகளும் கருத்துக்களும் நாட்டில் தனித்து நிற்கின்றன" மூன்று கட்சிகளும் கூட்டணியாக இணைந்து செயல்பட வேண்டும். ஒன்றாக வெற்றி பெற வேண்டும்." மாநில நலன் சீர்திருத்தங்கள், மேம்பாடு, தான் அனைத்திற்கும் முன்னோடி. வேலையில்லாதவர்களை ஐடி ஊழியர்களாக மாற்றுவதன் மூலம் நம் பலத்தைக் காண்பிப்போம். ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்கு அதிகாரத்தைக் காண்பித்த முதல் கட்சி தெலுங்கு தேசம்.
கேட்கும் நிலையிலிருந்து ஆளும் நிலைக்கு பி.சி.க்களை தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்தது. தெலுங்கு தேசம் ஒரு பிராண்ட். நாங்கள் நெறிமுறைகள் மற்றும் நேர்மையுடன் அரசியல் செய்கிறோம். விவசாயிகளுக்கு அன்னதாதா சுகிபவ திட்டத்தில் ஆண்டுக்கு ₹20 ஆயிரம் மூன்று தவணையில் வழங்கப்படும். இதில் ₹6,000 மத்திய வழங்கும். மத்திய அரசு முதல் தவணையை வழங்கும்போது, மாநிலத்தின் பங்கை நாங்கள் வழங்குவோம்.
ஆகஸ்ட் 15 முதல் ஆர்.டி.சி. பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் கொண்டு வரப்படும். மாநிலத்தில் 5 ரத்தன் டாடா இன்னோவாஷன் மையங்களைத் திறக்கிறோம். நாட்டில் ஊழலை ஒழிக்க ₹500, ₹1000 நோட்டுகள் ரத்து செய்து டிஜிட்டல் பண பரிமாற்றத்தை கொண்டு வர வேண்டும் என கூறினேன். அதன்படி ₹ 500, ₹1000 நோட்டுகள் ரத்து செய்யப்பட்டு ₹2000 ரூபாய் நோட்டுகள் கொண்டுவரப்பட்டது.

தற்பொழுது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகமாக உள்ள நிலையில் ₹500, ₹1000, ₹2000 என பெரிய நோட்டுகள் தேவையே இல்லை. யாராக இருந்தாலும் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதன் மூலம் ஊழலை ஒழிக்க முடியும். எந்த ஒரு பண பரிமாற்றத்திற்கு கணக்கிருக்கும். எனவே மீண்டும் ஒருமுறை கோரிக்கை வைக்கிறேன். பெரிய நோட்டுகளை ரத்து செய்து நாட்டில் ஊழலைக் குறைக்க வேண்டும் என்றார். ஒவ்வொரு கட்சி தொண்டர்களும் பெருமைப்படும் ஒரு நிர்வாகத்தை நாங்கள் வழங்குகிறோம்.
அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவது எனது பொறுப்பு. தேர்தலின்போது கொடுத்த சூப்பர் சிக்ஸ் திட்டங்களை நிறைவு செய்து மக்களிடையே நம்பிக்கையை அதிகரிப்போம் என்று சந்திரபாபு கூறினார். முன்னதாக கட்சி கொடியை ஏற்றி வைத்து நிறுவனர் என்.டி.ராமாராவ் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சி பொது செயலாளர் நாரா லோகேஷ் , மத்திய, மாநில அமைச்சர்கள் , எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சிக்கள் மாநகராட்சி, நகராட்சி தலைவர்கள் மற்றும் தெலுங்கு தேச கட்சியினர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: வந்தே மாதரம்.. உணர்ச்சி பொங்க முழங்கிய கிராமம்.. முரளி நாயக் உடலுக்கு பவன் கல்யாண் அஞ்சலி..!