3-வது கட்ட உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இந்த தேர்தலில்தான் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் முதல்முறையாக வாக்களித்தனர். தேர்தல் ஜனநாயகத்துக்குள் வராமலேயே 75 ஆண்டுகளாக ஒதுங்கி இருந்த மக்கள் முதல்முறையாக வாக்களித்துள்ளது முக்கியமான மைல்கல்லாகும். இதற்கு முன் நடந்த பல தேர்தல்களிலும் தங்களின் அடிப்படை உரிமை, கடமையான வாக்களிப்பதை இந்த மக்கள் மறுத்தும், புறக்கணித்து வந்தனர். ஆனால், இந்த முறை மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் வாக்களித்தனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில் “ நான் முதல்முறையாக இந்தத் தேர்தலில்வாக்களித்துள்ளேன். இதற்கு முன் ஒருபோதும் வாக்களித்தது இல்லை.” எனத் தெரிவித்தார்.மற்றொருவர் கூறுகையில் “தலைவர்கள் முன் தேவைகளை கூறுவதற்கு எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்ததால், வளர்ச்சியை நோக்கி நகர்கிறோம் என்ற மகிழ்ச்சியில் வாக்களித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் அதிகமாக நடமாடும் எல்லைப்பகுதியில் இந்த கேரளபந்தா கிராமம் இருக்ிறது. இங்கு 2வது கட்டமாக பஞ்சாயத்து தேர்தல் நேற்று நடந்தது. இதில் நக்சலைட் அதிகமாக இருக்கும் மற்றொரு பகுதியான பிஜபூர் மாவட்டத்திலிருந்தும் வந்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் அதிகம் இருக்கும் பகுதியில் ராணுவம், துணை ராணுவம், பாதுகாப்பு படையினர் அதிகப்படுத்தப்பட்டு இருப்பதால், நக்சலைட்டுகள் தாக்கம் குறைந்து மக்கள் நடமாட தொடங்கியுள்ளனர். சமீபத்தில் தேசிய பூங்கா அருகே 31 நக்சலைட்டுகள் போலீஸார் சுட்டுக்கொன்றனர்.
இதையும் படிங்க: கத்தி கூப்பிட்டாலும் ரெஸ்பான்ஸ் இல்லை.. 2 நாட்களாக தொடரும் மீட்பு பணிகள்.. சுரங்கத்தில் சிக்கிய 8 பேரில் நிலை என்ன?

தேர்தல் நடந்த பகுதியான கேரளபந்தாவில் ஒரு காலத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம், குடியிருப்பு , பயிற்சிகள் அதிகம் இருந்தது. ஆனால், நக்சலைட்டுகள் ஒழிக்ககப்பட்டிருப்பதால், மக்கள் அச்சம், வன்முறையில் இருந்து விடுபட்டு நம்பிக்கை, வளர்ச்சி, மேம்பாட்டு ஆகியவற்றில் நம்பிக்கை வைத்தும், ஜனநாயகத்தை ஆதரித்தும் முதல்முறையாக ஆர்வத்துடன் வாக்களித்தனர். பிஜபூர் மாவட்டத்தில் உள்ள தேசிய பூங்கா அருகே இருக்கும் 5 கிராம மக்களும் நேற்று தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்தனர். காடுகள், அடர்ந்த வனப்பகுதி, மலைகள், நீரோடைகள், ஆறுகளைக் கடந்து மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். தங்களின் பகுதியும் பிரதான வளர்ச்சிக்கு வர வேண்டும் என்ற ஆர்வத்தில் வாக்களித்தனர்.
இதையும் படிங்க: ஜெயலலிதா எனும் ஆளுமை... ஆணாதிக்க உலகில் ஒரு குறிஞ்சி மலர்..!!