சென்னையில் நேற்று இரவு ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக கொட்டிய கனமழை, நகரையே குளிர்வித்து, அதே சமயம் பலத்த சவால்களையும் எழுப்பியது. இந்த இயற்கை நிகழ்வு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் புரட்டிப்போட்ட ஒரு இரவாக அமைந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கையை தற்காலிகமாக பாதித்தது.நேற்று மாலையிலிருந்து, சென்னையின் வானிலை மாறத் தொடங்கியது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு மற்றும் வட தமிழ்நாடு-தெற்கு ஆந்திரப் பிரதேச எல்லைப் பகுதிகளில் உருவான இடியுடன் கூடிய மழை மேகங்கள், சென்னையை நோக்கி நகர்ந்தன.
இரவு 11 மணி முதல், சென்னையின் பல்வேறு பகுதிகளான சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம், கிண்டி, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, எழும்பூர், அடையாறு, வியாசர்பாடி, மந்தைவெளி, மற்றும் மணலி போன்ற இடங்களில் கனமழை கொட்டத் தொடங்கியது. விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. சென்னையில் இந்த மேக வெடிப்பு, குறிப்பாக மணலி பகுதியில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வானிலை மையத்தின் தகவலின்படி, மணலியில் ஒரே இரவில் 27 சென்டி மீட்டர் மழை பதிவாகியது, இது இந்த ஆண்டின் மிக அதிகபட்ச மழைப்பொழிவாகக் கருதப்படுகிறது.

மணலி நியூ டவுனில் 25 சென்டி மீட்டரும், விம்கோ நகரில் 22 சென்டி மீட்டரும் மழை பெய்ததாக பதிவாகியுள்ளது. மற்ற பகுதிகளிலும், துரைப்பாக்கத்தில் 19.5 சென்டி மீட்டர் உட்பட, கணிசமான மழைப்பொழிவு பதிவானது. கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி இயல்பு வாழ்க்கையை பாதித்தது. இந்த நிலையில், சென்னையில் நேற்று பெய்த கனமழை குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் ஜெர்மனியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் கேட்டறிந்தார்
இதையும் படிங்க: இனி வாட்ஸ் அப்-யிலேயே பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறலாம் - எப்படி தெரியுமா?
பெருமழை காரணமாக பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணியாற்றிட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வீட்டுல நாய் வளர்க்குறீர்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த அலர்ட்! சென்னை கார்ப்பரேஷன் கறார்