இந்தியத் தலைநகரில் கடந்த வாரம் நடைபெற்ற உச்ச நீதிமன்ற வழக்கின் போது, வேலையற்ற சில இளைஞர்களைக் கரப்பான் பூச்சிகளுடனும், ஓட்டுண்ணிகளுடனும் ஒப்பிட்டு நீதிபதி சூர்யகாந்த் அவர்கள் பேசியதாக எழுந்த சர்ச்சை, தற்போது இணையதளங்களில் அசுர வேகத்தில் வெடித்து ஒரு புதிய அரசியல் நையாண்டி இயக்கமாக உருவெடுத்துள்ளது. நீதிபதியின் இந்த கடுமையான விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, நாட்டின் விரக்தியடைந்த இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (Cockroach Janta Party - CJP) என்ற பெயரில் ஒரு சமூக வலைத்தள அரசியல் இயக்கத்தைத் தொடங்கி டாப் கியரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
கடந்த மே 15-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் போலிப் பட்டங்கள் மற்றும் சமூக ஊடக அழுத்தங்கள் குறித்த வழக்கின் போது நீதிபதி இந்த ஒப்பிடலை மேற்கொண்டார். இதற்குப் பலதரப்பிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் சமூக ஊடக வியூகவாதியான அபிஜீத் தீப்கே என்பவர், மே 16 அன்று எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் "அனைத்து கரப்பான் பூச்சிகளும் ஒன்றிணையுங்கள்" என்று கூறி ஒரு கூகுள் ஃபார்ம் (Google Form) லிங்க்கைப் பகிர்ந்து இந்த விசித்திரக் கட்சியைத் தொடங்கினார். 'சிஜேபி' (CJP) என்ற சுருக்கப் பெயரைக் கொண்ட இந்த நையாண்டி இயக்கம், தொடங்கிய 4 நாட்களுக்குள் லட்சக்கணக்கான இளைஞர்களை உறுப்பினர்களாக ஈர்த்து அசுர சாதனை படைத்துள்ளது. இணையதளங்களில் 6 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களுடன் (Followers) நாட்டின் தற்போதைய நம்பர்-1 ட்ரெண்டிங் விஷயமாக இது மாறியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் இந்தக் கட்சியில் இணைவதற்கான தகுதிப் பட்டியலை (Eligibility Criteria) வெளியிட்டு இளைஞர்கள் மாஸ் காட்டி வருகின்றனர். அதன்படி:
இதையும் படிங்க: "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும்.
அதீத சோம்பேறித்தனம் கொண்டிருக்க வேண்டும்.
24 மணி நேரமும் ஆன்லைனில் (Chronically Online) வாழ்பவராக இருக்க வேண்டும்.
சமூகப் பிரச்சினைகளைப் பற்றித் திறம்படப் புலம்பத் தெரிந்திருக்க வேண்டும்.
இந்த நையாண்டி இயக்கம் வெறும் வேடிக்கைக்காகத் தொடங்கப்பட்டாலும், இவர்களது தேர்தல் அறிக்கை (Manifesto) நாட்டின் தற்போதைய முக்கியப் பிரச்சினைகளை அக்குவேறு ஆணிவேறாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. ஓய்வு பெறும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குப் பாராளுமன்ற மாநிலங்களவை (Rajya Sabha) பதவிகளை வழங்கக் கூடாது, கட்சி தாவும் மக்கள் பிரதிநிதிகளுக்கு 20 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும், நீட் (NEET) மற்றும் சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவு அளிப்பது, அமைச்சரவையில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவது போன்ற மிகத் தீவிரமான கோரிக்கைகளையும் இந்த 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' முன்வைத்துள்ளது.
இந்தக் கட்சியின் அசுர வளர்ச்சியைப் பார்த்து வியந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களான மஹுவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத் உள்ளிட்ட பல தேசிய அரசியல் தலைவர்கள், தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களின் வாயிலாக இந்தக் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். "கரப்பான் பூச்சிகள் அழுக்கிலும், அழுகிய அமைப்பிலும் தான் வாழும்; நாட்டில் நிலவும் தற்போதைய வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் தேர்வு முறைகேடுகளின் ஒட்டுமொத்த அழுகிய கட்டமைப்பைச் சுட்டிக்காட்டவே இந்த அடையாளத்தை நாங்கள் கையில் எடுத்துள்ளோம்" என்று அதன் நிறுவனர் அபிஜீத் தீப்கே டாப் கியரில் விளக்கமளித்துள்ளார். விரைவில் தங்களது முதல் இணையவழி 'Gen-Z' மாநாட்டை நடத்தவும் இந்த அமைப்பினர் திட்டமிட்டுள்ளதால், கோட்டை மற்றும் டெல்லி அரசியல் வட்டாரங்களில் இந்த இணையப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "டாக்டர் சுப்பையா கொலை வழக்கு": 9 பேரின் விடுதலையை அதிரடியாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!