வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார்.
மகாராஷ்டிராவில் மர்மமான முறையில் 40 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மகாராஷ்டிராவில் மக்கள் தொகையை விட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களை விட ஐந்து மாதத்தில் அதிகம் பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்தியர்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுவதாக பகிரங்க குற்றச்சாட்டை ராகுல்காந்தி முன் வைத்தார்.
இதையும் படிங்க: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் தவெக...அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு
கருத்துக்கணிப்புகள் ஒன்று கூடுகிறது, ஆனால் தேர்தல் முடிவுகள் முற்றிலும் வேறு விதமாக இருக்கிறது என ராகுல் காந்தி சந்தேகத்தை எழுப்பினார்.

போலி வாக்காளர்கள் பட்டியலில் இணைக்கப்படுவதாக ராகுல் காந்தி சந்தேகத்தை முன் வைத்துள்ளார். கருத்துக்கணிப்புகளுக்கும் தீர்வு முடிவுகளுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இந்தியாவில் திடீர் திடீரென தேர்தல் தேதிகள் மாற்றப்படுவது சந்தேகத்தை அதிகரிப்பதாகவும் குறிப்பிட்டார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகவும் கூறினார்.
மேலும் பாஜக நடத்தும் தேர்தல் முறைகேடுகளுக்கு தேர்தல் ஆணையம் துணை போவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். வாக்களித்த வாக்காளர்களின் விவரங்கள் பூத் வீடியோ பதிவுகளை தேர்தல் ஆணையம் வழங்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, மின்னணு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வழங்கினால் 30 வினாடிகளில் மோசடியை கண்டறியலாம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம்