இந்தியாவின் முன்னணிப் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்ததாக வெளியான இணையப் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள வங்கி நிர்வாகம், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள நிதி முழுமையாகப் பாதுகாப்பாக உள்ளது என்றும், மிகக் குறைந்த அளவிலான வாடிக்கையாளர்களே இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில், இந்த இணையப் பாதுகாப்புச் சம்பவத்தால் வங்கியின் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு (IT Infrastructure), அன்றாட முக்கிய வங்கிச் செயல்பாடுகள், நிதி நிலைத்தன்மை அல்லது வழக்கமான வணிகத் தொடர்ச்சி ஆகியவற்றில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் விவரங்கள் கண்டறியப்பட்டு அவர்களின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பாதுகாப்பு நெறிமுறைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் நிதிச் சொத்துகள், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிறுவனத்தின் மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதே தங்களது முதன்மையான நோக்கம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள எஸ்பிஐ, வங்கியின் வழக்கமான சேவைகள் அனைத்தும் வழக்கம் போலச் சீராக இயங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வங்கிகளுக்கு அதிகரிக்கும் சைபர் தாக்குதல் அபாயம்! பன்னாட்டு நிதியம் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!
இதையும் படிங்க: ஹேக்கர்களின் பிடியில் ஹைதராபாத் ஏர்போர்ட்!! வெளியானது அதிர்ச்சி பதிவுகள்!! சைபர் போலீசில் புகார்!