காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கு எதிராக பாகிஸ்தான் தாக்குதல் நேற்று நடத்தி இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானை முக்கிய இடங்களை கூறி வைத்து இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தி தகர்த்தது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளது. அந்த கடிதத்தில் , அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொது மக்களை பாதுகாக்கும வகையில் செய்ய வேண்டிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். மருந்து, உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைப்பதுடன், கூடாரம், வாகனங்கள், ஜெனரேட்டர் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். சிவில் பாதுகாப்பு விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும். எனக் கூறியுள்ளது.
இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூர் 2.0... சிதறும் பாகிஸ்தான்..! பழிதீர்க்க காத்திருக்கும் இந்தியா..!
இதையும் படிங்க: தணியாத பற்று.. சேவையாற்ற அழையுங்கள்..! தாமாக முன் வந்த EX.SOLDIERS..!