இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஜம்மு காஷ்மீரின் விமான நிலையம், பல்கலைக்கழகம் மற்றும் ஜெய்சால்மரில் உள்ள விமானப்படை தளம் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அது மட்டுமல்லது ஸ்ரீநகர் விமான நிலையத்தை பாகிஸ்தான் தாக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து எல்லையோரம் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒட்டுமொத்தமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தர்மசாலாவில் டெல்லி - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து வந்த நிலையில், போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் முயற்சி அடுத்து போட்டி பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் உஷார் நிலை..! மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்..!

ஜம்மு காஷ்மீரி பாகிஸ்தான் எல்லை ஒட்டிய பகுதிகளில் பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து செக் வைக்கும் இந்தியா..! பாக். சார்ந்த ஓடிடி நிகழ்ச்சிகளுக்கு தடை..!