பகல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 15 அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் பாகிஸ்தானின் ரேடார் அமைப்புகளையும், வான் பாதுகாப்பு அமைப்புகளையும் இந்தியா தகர்த்தது.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகிய நிலையில் ட்ரோன் தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் இரவு முழுவதும் விளக்குகளை அனைத்து வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் இந்த தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: தீவிரவாதிகளுக்கு அரசு மரியாதை.. பதிலடிக்கு மதச்சாயம்! பாகிஸ்தானை தோலுறித்த ராணுவ அதிகாரிகள்
அது மட்டுமல்லாது இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் கனரக பீரங்ககளுடன் தரைவழி தாக்குதலும் தொடங்கியுள்ளது. ஜம்மு கஷ்மீரின் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரின் எல்லை ஓரம் உள்ள பூஞ்ச் பகுதியில் பயங்கர துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இதன் காரணமாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பஞ்சாபின் பதான்கோட்டில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எங்க பொறுமையை சோதிக்காதீங்க..! அடங்க மறுக்கும் பாகிஸ்தான்.. மிரளவிடும் இந்தியா..!