டெல்லி கால்காஜி பகுதியில் காவலர்கள் போல நடித்து மூன்று பேர், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 17 வயது. அவர் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் கால்காஜி பகுதியில் உள்ள பிரபலமான கோயிலுக்கு தனது 17 வயது நண்பருடன் சென்றுள்ளார். கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு, சுமார் 8 மணியளவில் அருகில் உள்ள ஆஸ்தாங்கு என்ற பூங்காவிற்குச் சென்றுள்ளனர். அங்கு தனது நண்பருடன் சிறுமி பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த மூன்று பேர், தங்களை காவல்துறையினர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களது வயது சுமார் 25 முதல் 30 வயதுக்குள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா தலைமையில்.. டெல்லியில் தொடங்கியது 18-வது பிரிக்ஸ் மாநாடு..!!
அவர்கள் தங்களை காவல்துறையினர் என அறிமுகப்படுத்திக் கொண்டதுடன், சிறுமியுடன் வந்த 17 வயது நபரை பிடித்து வைத்துக் கொண்டு, மூவரும் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி காவல்துறையிடம் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஒரு நபரை காவல்துறையினர் சிறிய அளவிலான என்கவுண்டர் நடவடிக்கைக்குப் பிறகு கைது செய்துள்ளனர்.
பிடிபட்ட நபரின் பெயர் ஆசஸ் என்பது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் நடத்திய இந்த என்கவுண்டரில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரில் ஒருவர் மட்டுமே தற்போது பிடிபட்டுள்ளார். எஞ்சியுள்ள இரண்டு பேரையும் கைது செய்ய காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினர் என்று தங்களை போலியாக அடையாளப்படுத்திக் கொண்டு, 17 வயது சிறுமியை மூன்று பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 15,000 போலீஸ்... 200 துணை ராணுவப்படை - டெல்லியை டோட்டல் கன்ட்ரோலில் எடுத்த காவலர்கள்... காரணம் என்ன?