டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை மாநில முதலமைச்சர் ரேகா குப்தா அறிவித்துள்ளார். நாட்டில் பயங்கரவாத சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டு வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலங்களில், நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த சதி செய்த பலர் கைது செய்யப்பட்டு, அவர்களின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. ஹரியானாவில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
ஹரியானாவில் அதிக அளவு ஆர்.டி.எக்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது நாடு முழுவதையும் உலுக்கியுள்ளது. இருப்பினும், இது நடந்த சில மணி நேரங்களுக்குள் தேசிய தலைநகரில் ஒரு பெரிய வெடிப்பு நிகழ்ந்தது கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையத்தில் ஒரு காரில் வெடிப்பு நிகழ்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

செங்கோட்டையின் கேட் எண் 1 இல் நிறுத்தப்பட்டிருந்த காரில் இந்த மிகப்பெரிய வெடிப்பு நிகழ்ந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. திங்கட்கிழமை மாலை 6.45 மணி அளவில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் அருகிலுள்ள 8 கார்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. அருகிலுள்ள கடைகளும் குண்டுவெடிப்பில் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: நடுங்க வைக்கும் டெல்லி கார் குண்டுவெடிப்பு...! உமரின் தாய், சகோதரர்கள் அதிரடி கைது...!
இந்த சம்பவத்தால் 13 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் ஏராளமானோர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த காரை ஓட்டி வந்த உமர் நபி என்பவர் அது புகைப்படம் வெளியான நிலையில் அவரது தாய் மற்றும் சகோதரர்களை புல்வாமா பகுதியில் இருந்து கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியை அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தா அறிவித்துள்ளார். டெல்லி கார் வெடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், கை, கால்களை இழந்தோருக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் இழப்பீடாக டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வெடித்து சிதறிய கார்... டெல்லி குண்டுவெடிப்பின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு...!