டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் பெறும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் பயங்கரவாத சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டு வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலங்களில், நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த சதி செய்த பலர் கைது செய்யப்பட்டு, அவர்களின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. ஹரியானாவில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஹரியானாவில் அதிக அளவு ஆர்.டி.எக்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது நாடு முழுவதையும் உலுக்கியுள்ளது.
இருப்பினும், இது நடந்த சில மணி நேரங்களுக்குள் தேசிய தலைநகரில் ஒரு பெரிய வெடிப்பு நிகழ்ந்தது கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையத்தில் ஒரு காரில் வெடிப்பு நிகழ்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

செங்கோட்டையின் கேட் எண் 1 இல் நிறுத்தப்பட்டிருந்த காரில் இந்த மிகப்பெரிய வெடிப்பு நிகழ்ந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. திங்கட்கிழமை மாலை 6.45 மணிக்கு இந்த வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் அருகிலுள்ள 8 கார்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. அருகிலுள்ள கடைகளும் குண்டுவெடிப்பில் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: காசுக்காக சொந்த காரில் பயணிகளை ஏற்றினால் ரூ.25,000 ஃபைன்! போக்குவரத்துத்துறை வார்னிங்..!!
இந்த வெடிப்பில் அங்கிருந்த சிலர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள எல்என்ஜேபி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் டெல்லியில் கார் கொண்டு வெடிப்பு நிகழ்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டது. பரபரப்பாக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் திடீரென கார் வெடித்துள்ளது. இந்த காட்சிகள் காண்போரை பதறச் செய்கிறது.
இதையும் படிங்க: குண்டு வெடிப்பு பயங்கரம்..! சதிகாரர்கள் தண்டிக்கப்படுவது உறுதி... பிரதமர் மோடி திட்டவட்டம்...!