பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினை. இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றம். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன, இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது.
இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலியல் தொல்லை பெரும் சமூக பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

பெண்களிடம் நட்பு ரீதியில் பழகி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இதனிடையே நட்பு என்பது எந்த விதமான உரிமையும் தராது என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு முன் ஜாமின் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு... தஷ்வந்த் விடுதலையானது எப்படி தெரியுமா?
அப்போது, இருவரும் நண்பர்கள் என்பதால் இருதரப்பின் சம்மதத்துடன் நடந்தது என குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. இதனைக் கேட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ணா காந்தா ஷர்மா மனுவை தள்ளுபடி செய்தார். அப்போது, நட்பு என்பது பாலியல் வன்கொடுமைக்கோ அல்லது அடைத்து வைத்து இரக்கமின்றி அடிக்கவோ எவ்வித உரிமையும் தராது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து… SORRY சொன்னதால் சமரசம்…!