தலைநகர் டில்லியில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டித் தீர்த்து வருகிறது.பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் குளம் போல் தேங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்கை முடங்கி கார், பைக்குகள் மிதந்தபடி மெதுவாக செல்கின்றன. லாஜ்பத் நகர், ஆர்கே புரம், துவாராகா உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சாலையில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தது. மேலும் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது.

இந்த சூழலில், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) டெல்லிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் டெல்லியில் நாளை வரை இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மணி நேரங்களுக்கு கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் மணிக்கு 70 முதல் 80 கிமீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் 5,000 பாகிஸ்தானியர்கள்.. இன்றுடன் முடியும் கெடு.. உளவுத்துறை பட்டியல்..!

இந்த நிலையில் கனமழை காரணமாக டெல்லியின் ஜாபர்பூர் காலா பகுதியில் ஒரு வீட்டின் மீது மரம் விழுந்ததில் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதேபோல் அதிகாலை துவாரகா பகுதியில் வீட்டின் மீது மரம் விழுந்து தூங்கிக் கொண்டிருந்த ஜோதி வயது 28, அவரது குழந்தைகள் ஆர்யன் வயது 7, ரிஷப் வயது 5 மற்றும் 7 மாத குழந்தை பிரியன்ஷ் படுகாயம் அடைந்தனர். 4 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

ஜோதியின் கணவர் அஜய் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார். சூறைக்காற்றால் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. 100க்கும் அதிகமான விமானங்கள் தாமதமாகவும், சில விமானங்கள் வேறு பகுதிகளுக்கும் திருப்பி விடப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு நாட்களுக்கு டில்லியில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 70 முதல் 80 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையாக மாறி உள்ளது.

இந்த நிலையில் பரபரப்பான விமான நிலையம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமான டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்(IGIA) அமைந்துள்ள பகுதியில் மோசமான வானிலை காணப்பட்டது. மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் சுமார் 200 விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் தரையிறங்க வேண்டிய 2 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், ஒரு விமானம் அகமதாபாத் விமான நிலையத்திற்கும் திருப்பி விடப்பட்டுள்ளது. வானிலை சீரான பிறகு விமான சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.
இதையும் படிங்க: டெல்லி வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ்.. பிரதமர் மோடியுடன் சந்திப்பு..!