2020-ஆம் ஆண்டு டெல்லி கலவர வழக்கில், கடுமையான பயங்கரவாத தடுப்புச் சட்டங்களின் கீழ் (UAPA) கைதாகி கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் சமூக ஆர்வலர் உமர் காலித்துக்கு, டெல்லி நீதிமன்றம் இன்று (டிசம்பர் 11 ) நிபந்தனைகளுடன் இரண்டு வாரக் கால இடைக்கால ஜாமினை வழங்கி உத்தரவிட்டது.
உமர் காலித் 2020-ஆம் ஆண்டுக் கைது செய்யப்பட்டதிலிருந்து பலமுறை ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றம் மற்றும் அமர்வு நீதிமன்றங்களில் போராடி வருகிறார். ஆனால், அவருடைய முந்தைய ஜாமீன் மனுக்கள் பலமுறை நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையில், குடும்பத்தில் நடைபெறும் முக்கியத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
வரும் டிசம்பர் 16-ஆம் தேதி முதல் டிசம்பர் 29-ஆம் தேதி வரை மொத்தம் இரண்டு வாரக் காலத்திற்குச் சிறையிலிருந்து வெளியே வர அனுமதிக்கப்படுகிறார். இந்த நாட்களில் அவர் தன் குடும்பத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பார்.
இதையும் படிங்க: ஆணவ கொலையின் உச்சம்: உனக்கு எங்க பொண்ணு கேட்குதா? - பெண்ணின் காதலனை கிரிக்கெட் பேட்டால் அடித்தே கொன்ற பெற்றோர்...!
நீதிமன்றம் ஜாமின் வழங்கியிருந்தாலும், அவர் டெல்லியை விட்டு வெளியேறக் கூடாது, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், சாட்சிகளைத் தொடர்பு கொள்ளக் கூடாது உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் உமர் காலித்துக்குக் கிடைத்திருக்கும் சிறிய ஆறுதலாக இந்த இடைக்கால ஜாமீன் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரெஃபெக்ஸ் குழுமத்தில் ஐ.டி. ரெய்டு: ₹1,000 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு!