தமிழகத்தில் சமீப காலமாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை எச்சரித்து உள்ளது. டெங்கு காய்ச்சல் என்பது டெங்கு வைரஸால் ஏற்படும் கொசுக்களால் பரவும் ஒரு நோய். டெங்கு காய்ச்சல் லேசான அறிகுறிகளுடன் தொடங்கி கடுமையான இரத்தப்போக்கு, ரத்த அழுத்தத்தில் திடீர் வீழ்ச்சி மற்றும் மரணம் போன்ற தீவிரமான பாதிப்புகளை கொடுக்கும்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் கணிசமாக பல இடங்களில் கடந்த ஆண்டு விட கூடுதலாக உள்ளது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் 15,796 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுப்புறத்தில் நீர் தேங்கியுள்ளதில் இருந்து இனப்பெருக்கமாகி ஏ.டி.எஸ் கொசு இந்த வைரசை பரப்பி வருகிறது. இந்த கொசுக்களின் பெருக்கத்தை தடுப்பதற்கு நீர் தேங்காமலும் அதில் இந்த கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதற்கு சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு முழுமையான விழிப்புணர்வை அளித்தும், நீர் தேங்கக்கூடிய பகுதிகளை மக்கள் உதவியுடன் சுத்தம் செய்ய உள்ளாட்சித் துறை மற்றும் நகராட்சி, மாநகராட்சி துறைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: “அத்திக்கடவு - அவிநாசி திட்டம் சுத்த வேஸ்ட்...” - கொங்கு மண்டலத்தில் இபிஎஸ் பெயரை டேமேஜ் ஆக்கிய அன்புமணி...!
டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உடனடியாக தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தினார். மேலும், கடுமையான அறிகுறிகள் ஏற்படாத வண்ணம் முறையான மருத்துவ சிகிச்சையை அளிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களும், பொது சுகாதார நிலையமும், மருத்துவ கல்லூரிகளும் முழுவீச்சுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சொந்த சமூக மக்களாலேயே அன்புமணிக்கு இப்படியொரு நிலையா? - திட்டவட்டமாக சொன்ன ஜி.கே.மணி...!