சாதி சான்றிதழ் என்பது இந்தியாவில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு சலுகைகளைப் பெறுவதற்கு முக்கியமான ஆவணமாக உள்ளது. இது ஒரு நபர் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது, குறிப்பாக பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பட்டியல் சாதி, அல்லது பட்டியல் பழங்குடியினர் போன்றவற்றை இந்த சான்றிதழ் அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போது இட ஒதுக்கீட்டு முறையின் கீழ் சலுகைகளைப் பெற உதவுகிறது.
இந்திய அரசியலமைப்பு, சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குகிறது. தமிழ்நாட்டில், BC, MBC, SC, ST பிரிவினருக்கு அரசு பணிகளில் ஒதுக்கப்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்த சாதி சான்றிதழ் அவசியம். அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு, உதவித்தொகை, மற்றும் அரசு பணிகளில் முன்னுரிமை பெற இந்த சான்றிதழ் தேவைப்படுகிறது.

இந்த நிலையில், இந்து, பௌத்தம், சீக்கியம் ஆகிய மதங்களைத் தவிர வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் பட்டியல் சாதி சான்றிதழ் பெற்றிருந்தால், அவை ரத்து செய்யப்படும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விநாயகர் தமிழ் கடவுள் இல்லையா? அது முருக பக்தர்கள் மாநாடே இல்லை... கடுமையாக சாடிய திருமாவளவன்!!
அதுபோல சான்றிதழ்கள் பெற்று அதன் மூலம் அரசு வேலைகளோ அல்லது வேறு ஏதேனும் ஆதாயங்களோ பெற்றிருந்தால் அனைத்தும் செல்லாததாகும் என்றும் பணம் வசூலிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். பட்டியல் சாதி இட ஒதுக்கீடு இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற 2024 உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி உள்ளார். மேலும், கட்டாய மதமாற்றங்களைத் தடுக்க வலுவான சட்ட விதிகள் கொண்டுவரப்படும் என்றும் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தப்பு தண்டா பண்ணீங்க! அம்புட்டுத்தான்!! இந்தியர்களை எச்சரிக்கும் அமெரிக்கா! விசாவுக்கு சிக்கல்..