தொகுதி மறு வரையறை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தொகுதி மறு வரையறை விஷயத்தில் திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது, இந்திய அரசியல் அமைப்பின் கூட்டாட்சி தத்துவத்தையும் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்கும் ஒரு நீண்டகால போராட்டமாக வெளிப்படுகிறது.
இந்த எதிர்ப்பு 2026-ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி மறு வரையறை (delimitation) செயல்முறையை மையமாகக் கொண்டது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைக்கும் இந்த நடவடிக்கை, மக்கள் தொகை கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு பாதகமாக அமையும் என்று திமுக கருதுகிறது.

தொகுதி மறு வரையறை என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் தொகுதிகளின் எல்லைகளையும் எண்ணிக்கையையும் மறுநிர்ணயம் செய்யும் செயலாகும். இதனை கடுமையாக திமுக எதிர்த்து வருகிறது.
இதையும் படிங்க: அண்ணாமலை மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன்... முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆவேசம்...!
தொகுதி மறு வரையறை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில், மத்திய பாஜக அரசு கொண்டுவரும் தொகுதி வரையறையால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டுகிறார். தொகுதி மறுவரை தொடர்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நாளை தொடங்கும் நிலையில், திமுக எம்பிக்கள் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். காலை 11 மணியளவில் காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இதையும் படிங்க: பச்சோந்திக்கே டஃப் கொடுக்கும் பழனிசாமி! வேலூர் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!