• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதுகில் குத்திய காங்கிரஸ்..!! திமுக இளைஞரணி கூட்டத்தில் ஒலித்த 'காங்கிரஸ் ஒழிக' கோஷம்..!!

    பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்தான் காங்கிரஸ் கட்சியினர் என்று திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Shanthi M. Sat, 23 May 2026 19:10:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-youth-wing-meeting

    தி.மு.க. இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர மற்றும் மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த முக்கிய கூட்டத்தில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. இளைஞர் அணி நடத்திய முதல் பெரிய அளவிலான ஆலோசனைக் கூட்டம் இது என்பதால் கட்சியினர் மத்தியில் முக்கியத்துவம் பெற்றது. கூட்டத்தில் தேர்தல் முடிவுகள், கட்சியின் எதிர்கால திட்டங்கள், எதிர்க்கட்சி பொறுப்புகள் மற்றும் தற்போதைய அரசின் செயல்பாடுகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. இறுதியில் நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முதல் தீர்மானத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது. "மக்களின் இந்த அமோக ஆதரவு கழகத்தின் கொள்கை வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது" எனக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 

    இரண்டாவது தீர்மானத்தில், தேர்தலில் மதச்சார்பின்மை சக்திகளை ஒன்றிணைத்து 73 தொகுதிகளில் வெற்றி பெற முக்கியப் பங்காற்றிய மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. "கொள்கை உறுதியோடு தேர்தல் களத்தை வழிநடத்திய தலைவருக்கு நன்றி" எனத் தீர்மானம் சுட்டிக்காட்டியது. மூன்றாவது தீர்மானம் முக்கியமானது. தேர்தலில் சில இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கான காரணங்களைக் கண்டறிய மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட இரு முனை உத்திகளுக்கு இளைஞர் அணி முழு ஆதரவு தெரிவித்தது. 

    இதையும் படிங்க: "துறைகள் கேட்டு விஜய்க்கு நிர்பந்தம் செய்யவில்லை": தாம்பரத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    Congress

    ஒருபுறம் இணையதளம் மூலம் பொதுமக்கள், நிர்வாகிகள், தொண்டர்களின் கருத்துகளைப் பெறுவது; மறுபுறம் ஒவ்வொரு தொகுதிக்கும் நேரடியாகச் சென்று ஆய்வு செய்வது ஆகியவை இதில் அடங்கும். "தலைவர் மேற்கொள்ளும் அனைத்து மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கும் இளைஞர் அணி துணை நிற்கும். அவர் இடும் ஒவ்வொரு பணியையும் தொய்வின்றி நிறைவேற்றி, கழகத்தை வலுப்படுத்த உறுதி ஏற்கிறோம்" என இளைஞர் அணி நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்தப் பகுதியில் கட்சியின் உள் மதிப்பீட்டுக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இளைஞர்களை அதிக அளவில் பொறுப்புகளில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் ஆலோசனைகள் எழுந்தன. 

    நான்காவது தீர்மானத்தில் காங்கிரஸ் கட்சியின் மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. கடந்த பல தேர்தல்களிலும் திமுக தொண்டர்களின் உழைப்பால் பலன் அடைந்த காங்கிரஸ், 2026 தேர்தலிலும் 5 சட்டமன்ற உறுப்பினர்களை வென்றதோடு, மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் பெற்றது. ஆனால், "ஒரு நன்றி கூடத் தெரிவிக்காமல், ஒரே இரவில் அணி மாறியது" எனக் கூட்டம் கண்டித்தது. "பழம்பெரும் பேரியக்கம் என்ற அடையாளத்தைக் கூட மறந்து, பதவி ஆசையில் அரசியல் நாகரிகத்தை இழந்துவிட்டனர். அடுத்தவர் உழைப்பில் ஒட்டுண்ணியாக வாழ்ந்து, தேவைக்கேற்ப துரோகம் செய்வது காங்கிரசின் பழக்கம்" எனத் தீர்மானம் சாடியது. 

    மேலும், "இன்று நமக்குச் செய்த துரோகத்தை நாளை புதிய கூட்டணிக்கும் செய்வார்கள். பயணிக்கும் படகில் ஓட்டை போடும் அறிவாளிகள்தான் அவர்கள்" எனக் குறிப்பிடப்பட்டது. தற்போதைய ஆட்சியின் மீதான விமர்சனமும் கூட்டத்தில் இடம்பெற்றது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்த தி.மு.க. அரசு மீது பொய்ப் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்தவர்கள், பொறுப்பேற்ற 13 நாட்களிலேயே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூட்டம் சுட்டிக்காட்டியது.

    கோவையில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை, புதுக்கோட்டையில் நீதிமன்றத்தில் வந்த சிறுவன் வெட்டிக் கொலை, வந்தவாசியில் 14 வயது சிறுமி மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை, படப்பை இரட்டைக் கொலை, தூத்துக்குடி மது தகராறு கொலை, சேலம் மாணவர் கொலை, மணலி பிரசாந்த் கொலை, விச்சூர் இளைஞர் கொலை உள்ளிட்ட பல சம்பவங்கள் மேற்கோள் காட்டப்பட்டன. "முப்பதுக்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்" என புள்ளிவிவரம் தெரிவிக்கப்பட்டது.

    "முதலமைச்சர் ரீல்ஸ் ஆட்சியை நடத்துகிறார். கோட்டை கழற்றுதல், கூலிங் கிளாஸ், பொலிரோ ஓட்டுதல், பேட்டரி கார் பவனி போன்ற வெற்று விளம்பரங்களில் ஈடுபடுகிறார். இதற்குப் பதிலாக பத்திரிகையாளர்களைச் சந்தித்து மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ரீல் ஆட்சியை நிறுத்தி, ரியல் நிர்வாகத்தை வழங்க வேண்டும்" என இளைஞர் அணி வலியுறுத்தியது. 

    கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "இளைஞர் அணி எப்போதும் கழகத்தின் கட்டளைகளுக்கு உடனடியாக செயல்படும். மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க தொடர் பணியாற்றுவோம்" என்றார். மு.க.ஸ்டாலின் தனது உரையில் கட்சியின் ஒற்றுமைக்கு வலியுறுத்தினார்.இந்தக் கூட்டம் தி.மு.க.வின் எதிர்கால அரசியல் உத்திகளுக்கு வழிகாட்டியாக அமையும் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

    இதையும் படிங்க: கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    மேலும் படிங்க
    வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..!! தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!

    வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..!! தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!

    பக்தி
    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    தமிழ்நாடு
    இதயத்தின் நண்பன் ராஸ்பெர்ரி: சிறிய பழத்தில் பெரிய ஆரோக்கிய பலன்கள்..!! தெரிஞ்சிக்கோங்க..!!

    இதயத்தின் நண்பன் ராஸ்பெர்ரி: சிறிய பழத்தில் பெரிய ஆரோக்கிய பலன்கள்..!! தெரிஞ்சிக்கோங்க..!!

    உடல்நலம்
    எஸ்.ஜானகிக்கு இசை அஞ்சலி செலுத்திய கங்கை அமரன்..!! எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட பாடகர்கள்.. லண்டனில் கண்கலங்க வைத்த தருணம்..!

    எஸ்.ஜானகிக்கு இசை அஞ்சலி செலுத்திய கங்கை அமரன்..!! எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட பாடகர்கள்.. லண்டனில் கண்கலங்க வைத்த தருணம்..!

    சினிமா
    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    தமிழ்நாடு
    மனு அளித்தும் நடவடிக்கை இல்லை! தலைமை செயலகத்தில் பெண் பகீர் செயல்! முதல்வர் தனிப்பிரிவில் குவிந்த கூட்டம்!

    மனு அளித்தும் நடவடிக்கை இல்லை! தலைமை செயலகத்தில் பெண் பகீர் செயல்! முதல்வர் தனிப்பிரிவில் குவிந்த கூட்டம்!

    அரசியல்

    செய்திகள்

    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    தமிழ்நாடு
    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    தமிழ்நாடு
    மனு அளித்தும் நடவடிக்கை இல்லை! தலைமை செயலகத்தில் பெண் பகீர் செயல்! முதல்வர் தனிப்பிரிவில் குவிந்த கூட்டம்!

    மனு அளித்தும் நடவடிக்கை இல்லை! தலைமை செயலகத்தில் பெண் பகீர் செயல்! முதல்வர் தனிப்பிரிவில் குவிந்த கூட்டம்!

    அரசியல்
    எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு நிம்மதி! நேரில் ஆஜராக விலக்கு... சொத்துக்குவிப்பு வழக்கில் ஹைகோர்ட் நிவாரணம்!

    எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு நிம்மதி! நேரில் ஆஜராக விலக்கு... சொத்துக்குவிப்பு வழக்கில் ஹைகோர்ட் நிவாரணம்!

    அரசியல்
    பாங்காக்கில் பயங்கர தீ விபத்து..!! 27 பேர் பரிதாப பலி, 63 பேர் காயம்..!!

    பாங்காக்கில் பயங்கர தீ விபத்து..!! 27 பேர் பரிதாப பலி, 63 பேர் காயம்..!!

    உலகம்
    தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவர் லயோலா மணி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவர் லயோலா மணி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share