காற்றுக்குத் திசை மாறுவது மலை அல்ல, மணல் குன்று என்றும், தங்களைச் சிங்கம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் தற்போது சிறு கரப்பான் பூச்சிகளாக மாறுவார்கள் என்பதையும் தமிழ்நாட்டில் சிலர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் என பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மிகக் காரசாரமாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
'வீ த லீடர்ஸ்' (We the Leaders) அமைப்பின் நிறுவனரும் முன்னாள் மாநிலத் தலைவருமான அண்ணாமலையை மறைமுகமாகக் குறிவைத்து அவர் வெளியிட்டுள்ள இந்த எக்ஸ் தளப் பதிவு, தமிழக அரசியல் மற்றும் பாஜக வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

அரசியல் களத்தில் உறுதியான நிலைப்பாடின்றிச் செயல்படுபவர்களை விமர்சிக்கும் வகையில் தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் தனது கருத்தைப் பகிர்ந்துள்ள அவர், காற்று வீசும் போதெல்லாம் உருவம் மாறுவது மலை அல்ல; மணல் குன்றுகள்தான் உருவம் மாறும். ஒரு காலத்தில் தங்களைச் சிங்கங்கள் என்று கர்ஜித்துக் காட்டிக் கொண்டிருந்த சிலர், இப்போது கரப்பான் பூச்சிகளைப் போலப் பதுங்கிப் புறமுதுகிட்டு ஓடுவதைத்தான் தமிழக மக்கள் நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: சரிப்பட்டு வராது... "தங்கத்தை விட தரமான பால்தான் தேவை".. CM விஜய்க்கு தமிழிசை வலியுறுத்தல்..!!
இதையும் படிங்க: போட்டோஷூட்டால் மாநிலம் வளராது: தவெக அரசை வறுத்தெடுத்த அண்ணாமலை!