எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் நகரில் நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியை 'அழகான இளம் பெண்' என்று புகழ்ந்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டில் பல உலகத் தலைவர்கள் கலந்துகொண்ட நிலையில், டிரம்பின் இந்த கருத்து சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த நிகழ்வு, மெலோனியின் தலைமைத்துவத்தைப் பாராட்டும் வகையில் தொடங்கியது என்றாலும், பாலின சமத்துவம் குறித்த உலகளாவிய விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.

மாநாட்டின் முதன்மை நிகழ்வாக, டிரம்ப் தலைமையில் ஏற்பட்ட காசா நிறுத்து உடன்படிக்கையை அடுத்து, அமெரிக்கா, எகிப்து, துருக்கி, கத்தார் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தலைவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதில் மெலோனி தனித்துவமாக ஒரே பெண் தலைவராகத் திகழ்ந்தார். இதனையடுத்து மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், "நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்களே.. உண்மையிலேயே மெலோனி அழகான பெண்., இதையே அமெரிக்காவில் பேசியிருந்தால் அரசியல் வாழ்க்கை முடிந்திருக்கும், ஆனால் நான் ரிஸ்க் எடுக்கிறேன்" என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
இதையும் படிங்க: காசா அமைதி திட்ட ஒப்பந்தம்..!! முதல் நபராக கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்..!
மேலும், இம்மிக்ரேஷன் மற்றும் கலாச்சார விவகாரங்களில் தனது சித்தாந்த அணுகுமுறையில் ஒத்துப்போகும் மெலோனியை "அற்புதமானவர்" என்றும், "அவரை அவர்கள் உண்மையிலேயே மதிக்கிறார்கள்" என்றும் கூறினார். இது அவர்களின் ஐடியாலஜிக்கல் தோழமையை வலுப்படுத்தியது.
இந்த உச்சி மாநாடு காசா பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. டிரம்ப் தனது உரையில் பல தலைவர்களைப் புகழ்ந்தார், ஆனால் மெலோனி குறித்த அவரது கருத்து குறிப்பிடத்தக்கதாக இருந்தது. "அழகான" என்று அழைப்பது அமெரிக்காவில் அரசியல் ரீதியாக ஆபத்தானது என்பதை அவர் சுட்டிக்காட்டினார், இது அமெரிக்காவின் #MeToo இயக்கம் மற்றும் பாலின சமத்துவ விவாதங்களை நினைவூட்டுகிறது. டிரம்பின் இந்த பேச்சு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. சிலர் இதை டிரம்பின் வழக்கமான நகைச்சுவை பாணி என்று கூறுகின்றனர், மற்றவர்கள் இது பெண்களைப் பொருள்படுத்தும் போக்கு என்று விமர்சிக்கின்றனர். பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானை டிரம்ப் கிண்டல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

மெலோனி, இத்தாலியின் முதல் பெண் பிரதமராக 2022 இல் பதவியேற்றவர், வலதுசாரி அரசியல்வாதியாக அறியப்படுகிறார். டிரம்புடன் அவர் நெருங்கிய நட்புறவு கொண்டுள்ளார். இந்த சம்பவம், உலக அரங்கில் பாலின உணர்வுகள் குறித்த விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது. இதுவரை மெலோனி இந்த கருத்துக்கு பதிலளிக்கவில்லை. அமெரிக்க அரசியலில் இதுபோன்ற கருத்துகள் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன, ஆனால் டிரம்ப் தனது பாணியை மாற்றிக்கொள்ளவில்லை. இந்த நிகழ்வு, உலகத் தலைவர்களின் தனிப்பட்ட கருத்துகள் எவ்வாறு அரசியல் உரையாடல்களை பாதிக்கின்றன என்பதற்கு உதாரணமாக உள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த டிரம்ப்... முதல் டார்கெட்டே சீனா தான்... அமெரிக்கா எடுத்த ராட்சத முடிவு...!