2026 சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் நடத்தி வருகிறார். அவ்வப்போது, விவசாயிகள், மீனவ பிரதிநிதிகள், நெசவாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து வருகிறார். அது மட்டுமல்லாது அதிமுகவின் சாதனைகள் மற்றும் திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்கள் தொடர்பாகவும் எடுத்துரைத்து வருகிறார். இந்த நிலையில், திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும் என்ற அதிமுகவின் புதிய பிரச்சாரத் திட்டத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புதுக்கோட்டையில் தொடங்கி வைத்தார். மேலும் உண்மைக்காக உரிமைக்காக என்ற புதிய பிரச்சாரத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த பிரச்சாரத் திட்டம் கவனத்தை ஈர்த்தது.
கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் இருந்து அவரது சுற்றுப்பயணம் தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி, மக்களைச் சந்தித்து, திமுக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்துவதும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துரைப்பதும் இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில உரிமைகள், அமைதி, வளர்ச்சி, மற்றும் செழிப்பை மீட்டெடுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில், அடுத்த கட்டமாக மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், திருச்சுழி சட்டமன்றத் தொகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நான்கு நாட்கள் மதுரை மாவட்டத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள் மத்தியில் உரையாற்றியும் வருகிறார். மதுரை மாவட்டம் சிந்தாமணியில் பல்துறை சார்ந்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சிக்காலத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி முதலீடுகளை ஈர்த்ததாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: முடிவு பெருசா இருக்குமோ? செங்கோட்டையன் தீவிர ஆலோசனை! கலக்கத்தில் கட்சியினர்
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானால் மட்டுமே நிறுவனங்கள் வந்து விடாது என தெரிவித்தார். தொழில்துறையினரின் அனைத்து கோரிக்கைகளும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: WELCOME எடப்பாடி அண்ணா! மதுரை மண்ணில் இபிஎஸ்.. தொண்டர்கள் செம குஷி..!