தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய் குறித்தும், நடிகை குறித்தும் பேசியதாக கண்டனங்கள் வலுத்தன. அதைத்தொடர்ந்து அவர் மீது ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று காலை சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக கைது செய்யப்பட்டு தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனால் திமுகவினர் கொந்தளித்துப் போனார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அப்போது அவரை தியாகி போல் சித்தரித்து முழக்கங்களை எழுப்புவதாக தமிழக வெற்றி கழகம் விமர்சனம் செய்திருக்கிறது. அவதூறு பேச்சுக்காக தான் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாகவும் அவரை தியாகி போல் உருவகப்படுத்துவதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தமிழக வெற்றி கழகம் தனது விமர்சனத்தில், அய்யனாருக்கு வெட்டுவதற்காக அழைத்துச் செல்லப்படும் ஆடு, தன் உடலில் பூசப்பட்டிருக்கும் மஞ்சள் அலங்காரத்தை ரசிப்பதைப் போல, மேகதாது என்றால் என்னவென்றே தெரியாத மோகமாது உதவாநிதி, தஞ்சையில் செய்த ஆபாச வக்கிரத்துக்கு இப்போது சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளது. தனிமனித வக்கிரத்தை தியாகமாக சித்தரித்து, தமிழ்நாடு முழுவதும் பொதுச்சொத்து சேதத்தையும், வன்முறைகளையும், கலவரத்தையும் தூண்டி வருகிறது திமுக. திமுகவின் இன்றைய தியாக முழக்கம் என்பது வெறும் அரசியல் நாடகம் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்! உதயநிதி கைது குறித்து அமைச்சர் அருண் ராஜ் விளக்கம்!
தனிப்பட்ட முறையில் இழைத்த குற்றத்திற்கு சட்டத்தின் முன் நிற்க வேண்டிய நிலையில் இருக்கும் ஒருவரை தியாகியாக உருவகப்படுத்தி, மக்களைத் தூண்டிவிட்டு வன்முறைக்குத் தள்ளுவது என்பது ஜனநாயக விரோத செயல் என்று கூறியது. பொதுச்சொத்துகளை அழித்து, சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் இந்த வன்முறைப் போக்குகளை திமுக உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தமிழக வெற்றிக் கழகம் இந்த வன்முறை தூண்டல்களை கண்டிப்பதோடு, சட்டம் தன் போக்கில் செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. தனிமனித குற்றங்களை அரசியல் மூலதனமாக மாற்றி சமூகத்தை சீரழிக்கும் இந்த போக்கை மக்கள் நிராகரிப்பார்கள் என்பதே எங்கள் உறுதியான நம்பிக்கை எனவும் கூறப்பட்டிருக்கிறது. திமுகவின் இன்றைய தியாக முழக்கம், அய்யய்யோ, எம்மா எம்மா..! என்று கூறியுள்ளது.
இதையும் படிங்க: ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் கடும் எச்சரிக்கை!