இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு பெரிய மாற்றம் எடுக்கப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கியிலிருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த பிப்ரவரி மாதம் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளில் இருந்து குறைத்த ரிசர்வ் வங்கி அதனை 6.5%த்திலிருந்து 6.25% குறைத்தது. இதேபோல் இன்னும் இரண்டு முறை குறைப்பு செய்யப்பட்டு தற்போது ரெப்போ விகிதம் 6 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில் மீண்டும் ரெப்போ விகிதம் குறைக்கப்படும் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் மாதம் மட்டுமல்லாமல் ஆகஸ்ட், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் தலா 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்த நிதியாண்டிற்குள் மொத்தமாக 100 அடிப்படை புள்ளிகள் வரை குறைப்பு செய்யும் திட்டத்தை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பச்சா பாலிடிக்ஸ்.. திமுகவை விமர்சிக்கும் விஜய்யை ஒரே வார்த்தையில் டேமேஜ் ஆக்கிய துரைமுருகன்!!

இது ஏன் முக்கியம் தெரியுமா? ரெப்போ விகிதம் என்பது ரிசர்வ் வங்கியிலிருந்து வணிக வங்கிகள் கடன் வாங்கும் போது செலுத்தும் வட்டி. இதே விகிதத்தை அடிப்படையாக கொண்டு வங்கிகள் நமக்கு வீடு, கார் போன்ற கடன்களுக்கு வட்டி நிர்ணயம் செய்கின்றது. அதாவது ரெப்போ விகிதம் குறையும் போது நமக்கு கிடைக்கும் கடன்களின் வட்டியும் குறையும்.

இதன் மூலம் உங்கள் வீட்டு கடனுக்கான இம்ஐ குறைய வாய்ப்பு அதிகம். இதுவரை வங்கிகள் உங்கள் அனுமதி இல்லாமல் ரெப்போ விகிதம் உயரும் போது இஎம்ஐ காலத்தை நீட்டித்து வந்தன. ஆனால் இனிமேல் உங்கள் ஒப்புதல் இல்லாமல் வங்கிகள் இஎம்ஐ காலம் அல்லது தொகையை மாற்ற முடியாது. இது ஒரு பெரிய மாற்றம்.
இதையும் படிங்க: நிதிஷ்குமாருக்கு உடல் நலன், மன நலன் பாதிப்பு.. பகீர் கிளப்பும் பிரசாந்த் கிஷோர்.!!